Advertisment

வீடியோ: வழிப்பறி கொள்ளையனை சரமாரியாக தாக்கிய தைரிய பெண்மணி

தினந்தோறும் வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வழிப்பறி கொள்ளையர்கள் பெரும்பாலும் குறிவைப்பது பெண்களாக உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: வழிப்பறி கொள்ளையனை சரமாரியாக தாக்கிய தைரிய பெண்மணி

தினந்தோறும் வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வழிப்பறி கொள்ளையர்கள் பெரும்பாலும் குறிவைப்பது பெண்களாக உள்ளனர். நடந்து செல்லும்போதோ, இருசக்கர வாகனங்களில் செல்லும்போதோ பெண்கள் வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்காமல் தற்காப்பு உணர்வுடனேயே இருக்க வேண்டியுள்ளது.

Advertisment

பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் சாலையில் நடந்துசென்ற பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்ற இளைஞரை அப்பெண், சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பட்டப்பகலில் சாலையில் நடந்துசெல்லும் பெண் ஒருவரின் கைப்பையை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பறித்து தப்பிக்க முயல்கின்றனர். சிறிது தூரத்தில் அந்த இளைஞர்கள் கீழே விழுந்துவிடவே, உடனடியாக சுதாரித்துக்கொண்ட அப்பெண், ஓடிச்சென்று அந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கினார். அதில், ஒரு இளைஞர் தப்பித்துவிட, மற்றொரு இளைஞரை அப்பெண் தாக்கிய வீடியோ இதோ:

அப்பெண்ணை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment