Advertisment

வைரல் வீடியோ: ஸ்ருதியுடன் சிரித்து மகிழும் கமலின் ஜாலி மொமண்ட்

நடிகை சுருதிஹாசன் பியானோ வாசிக்க, அதன் இசைக்கேற்ப கமல்ஹாசன் முகபாவனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வைரல் வீடியோ: ஸ்ருதியுடன் சிரித்து மகிழும் கமலின் ஜாலி மொமண்ட்

நடிகை சுருதிஹாசன் பியானோ வாசிக்க, அதன் இசைக்கேற்ப கமல்ஹாசன் முகபாவனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கமல்ஹாசனின் மகளான நடிகை சுருதிஹாசன், நடிப்புக்கு வருவதற்கு முன்னரே பல தமிழ், இந்தி மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். தன் தந்தை நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்திற்கு சுருதி ஹாசன் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடிகர் கமல்ஹாசன் தனது திரைப்படங்கள் மட்டுமல்லாமல், மற்ற நடிகர்களின் திரைப்படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டகிராம் கணக்கில் நடிகை சுருதிஹாசன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சுருதிஹாசன் பியானோ வாசிக்கை, அதன் இசைக்கு ஏற்ப கமல்ஹாசன் முகபாவனை செய்கிறார். உடனடியாக இருவரும் வெடித்துச் சிரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தில் முதன்முறையாக கமல் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தாண்டு நடிப்பைவிட, இசைக்கு அதிக முக்கியத்துவம் தரப்போவதாக ஸ்ருதிஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment