Advertisment

வீடியோ: ஆதரவற்றவர்களுக்காக 100 மேகி பாக்கெட்டுகளை நாக்கில் எச்சில் ஊற சமைக்கும் பெண்கள்

நிச்சயம் அந்த மேகி சுவையானதாக இருக்கும். ஏனென்றால், இது ஆதரவற்றவர்களுக்கு தருவதற்காக. அவர்கள் சமைத்த மேகியில் அன்பு இருப்பதால், சுவை கூடுதலாக இருக்கும்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: ஆதரவற்றவர்களுக்காக 100 மேகி பாக்கெட்டுகளை நாக்கில் எச்சில் ஊற சமைக்கும் பெண்கள்

மேகி நூடுல்ஸ் என்றால் யாருக்குத்தான் பிரியம் இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு மேகி. உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற விவாதத்தை தாண்டி , அதை சாப்பிடும்போது அனைவருமே குழந்தையாக உணர்கின்றனர். பல நெருக்கடியான வேலைகளுக்கு மத்தியில் சூடாக மேகி சாப்பிடும்போது ரிலாக்ஸாக இருப்பதாக பலர் உணர்கின்றனர்.

Advertisment

இந்த வீடியோவில் பெண்கள் இருவர் 100 மேகி பாக்கெட்டுகளை சுடச்சுட உணவாக தயார் செய்கின்றனர். வெங்காயம், தக்காளி, பட்டாணி, கேரட், பீன்ஸ் என எல்லாவற்றையும் சேர்த்து, மசாலாவுடன் அவர்கள் சமைக்கும்போது நாக்கில் எச்சில் ஊறுகிறது.

நிச்சயம் அந்த மேகி சுவையானதாக இருக்கும். ஏனென்றால், இந்த உணவை ஆதரவற்றவர்களுக்கு தருவதற்காக. அதனால், அவர்கள் சமைத்த மேகியில் அன்பு இருப்பதால், சுவையும் கூடுதலாகவே இருக்கும். 10 நிமிடங்கள், 6 நொடிகள் உள்ள இந்த வீடியோவை, கட்டுரை எழுதும் வரையில் சுமார் 5 லட்சத்து 90 ஆயிரத்து 656 பேர் பார்த்துள்ளனர். நீங்களும் அவர்கள் மேகி சமைப்பதையும், மற்றவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவதையும் பாருங்கள்.

உணவை வீணாக்குபவர்கள் இந்த வீடியோவை பார்த்த பிறகு, தங்களால் இயன்றவரை ஆதரவற்றவர்களுக்கு உணவை தர வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment