Advertisment

அதிர்ச்சி வீடியோ: சிறுவர்களை காப்பாற்றும்போது ராட்சத சக்கர ராட்டிணத்தின் அந்தரத்திலிருந்து விழுந்த நபர்

சிறுவர்களை காப்பாற்ற சென்ற அங்கிருந்த ஊழியர் ஒருவர், ராட்டினத்தின் அந்தரத்திலிருந்து கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
america, north carolina, trending

தீம் பார்க், அம்யூஸ்மெண்ட் பார்க்குகளில் உள்ள சாகச ரைடுகள் என்றால் உங்களுக்கு பயமா? இந்த வீடியோவைக் கண்டால் நீங்கள் அந்த பக்கம் தலையைக்கூட காட்ட மாட்டீர்கள். அமெரிக்காவில் கண்காட்சியொன்றில் ராட்சத சக்கர ராட்டினத்தில் சாய்ந்த நிலையிலிருந்த பெட்டியில் அமர்ந்திருந்த இரண்டு சிறுவர்களை காப்பாற்ற சென்ற அங்கிருந்த ஊழியர் ஒருவர், ராட்டினத்தின் அந்தரத்திலிருந்து கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் க்ரீன்ஸ்போரொ என்ற இடத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்சத சக்கர ராட்டிணம் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது, இயக்க நிலையிலிருந்த ராட்டிணத்தின் ஒரு பெட்டி சாய்ந்த நிலையிலிருந்ததால் ராட்டிணம் நிறுத்தப்பட்டது. அந்தப் பெட்டியில், 7 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அமர்ந்திருந்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்த ஊழியர் ஒருவர், அச்சிறுவர்களை காப்பாற்ற ராட்டிணத்தின் கம்பியில் ஏறி சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அப்பெட்டி திடீரென உடைந்து, பிடிமானம் இல்லாமல் நின்றுகொண்டிருந்த ஊழியர் அந்தரத்திலிருந்து கீழே விழுந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காமல் அங்கு நின்றிருந்தவர்கள் அபாய குரலில் கூக்குரலிட்டனர்.

ஆனால், நல்ல வேளையாக அந்த ஊழியர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அச்சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

America North Carolina
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment