Advertisment

சாலையில் மூன்று பேருடன் ஃப்ளிப் ஆன ஸ்கூட்டர்! வைரல் வீடியோ

சுமார் 26 நொடிகள் கொண்ட இந்த வீடியோ, இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
scooter-video_

சீனாவின் சியாங்ஜூ மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தீன் வீடியோ வெளியாகியுள்ளது. சாலையில் வேகமாக வருகிறது ஒரு ஸ்கூட்டர். அதில் பெரியவர்கள் இருவர் மற்றும் ஒரு சிறுவர் என மூன்று பேர் பயணம் மேற்கொள்கின்றனர்.

Advertisment

இதனிடையே, சாலையில் கார் ஒன்று திரும்ப முயற்சிக்கிறது. இதனால், சட்டடென ஸ்கூட்டரில் வந்தவர் பிரேக் போடவே, ஸ்கூட்டர் ஃப்ளிப் ஆகிவிட்டது. கீழே விழுந்து எழுந்தவுடன், ஸ்கூட்ரை எடுக்கும்போது அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.

கீழே விழுந்த ஸ்கூட்டரை அந்த நபர் தூக்கும் போது தறிகெண்டு ஓட ஆரம்பிக்கிறது அந்த ஸ்கூட்டர். அந்த நபர் எவ்வளவோ முயற்ச்சி செய்தும் ஸ்கூட்டரை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், அதனை அப்படியே விட்டுவிடுகிறார் அந்த நபர். இறுதியில் ஆள் இல்லாமலேயே சிறிது தூரம் செல்லும் ஸ்கூட்டர், மற்றொரு வாகனத்தில் மோதி விழுகிறது.

இந்த வீடியோவை, சீனாவைச் சேர்ந்த “பீப்பிள் டெய்லி” தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சுமார் 26 நொடிகள் கொண்ட இந்த வீடியோ, இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment