Advertisment

நகை, ஆடைகளுக்குதான் ரொமாண்டிக் விளம்பரமா? வைரலாகும் ஸ்மோக் அலாரம் ரொமாண்டிக் விளம்பரம்

தீபாவளி பண்டிகைக்காவது உங்கள் வீடுகளில் புகை உணர் கருவிகளை பொருத்துவது அவசியம் என்னும் விதத்தில் விளம்பரம் ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
smoke alarm, fire safety, romantic ad

தீபாவளி பண்டிகைக்கு எல்லோரும் தயாராகிவிட்டோம். பட்டாசு வெடி சத்தம் இப்போதே காதை பிளக்கிறது. ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு இவற்றுக்கெல்லாம் அப்பால், இன்றும் பெரும்பாலான வீடுகளில் பட்டாசு வெடி சத்தம் இல்லாமல் தீபாவளி பண்டிகை முற்றுப்பெறுவதில்லை. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது நாம் சில பாதுகாப்பு விதிமுறைகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Advertisment

இந்த தீபாவளி பண்டிகைக்காவது உங்கள் வீடுகளில் புகை உணர் கருவிகளை பொருத்துவது அவசியம் என்னும் விதத்தில் விளம்பரம் ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இது நம்மூர் விளம்பரமல்ல. இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட விளம்பரம். கெண்ட் ஃபயர் நிறுவனம் மற்றும் பேரிடர் மீட்பு துறையும் இணைந்து வெளியிட்ட அந்த விளம்பரத்தில், காதல் ஜோடி இருவர், 1987-ஆம் ஆண்டில் வெளிவந்த ’டர்ட்டி டான்சிங்’ திரைப்படத்தின் ரொமாண்டிக் பாட்டுக்கு நடனமாடுகின்றனர். அப்போது, காதலன் காதலியை உயர தூக்குகிறார். அதன்பின், அந்த பெண் வீட்டில் பொருத்தப்பட்ட புகை உணர் கருவியை சோதனை செய்து பார்க்கிறார். இது நெட்டிசன்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட நடன அசைவு, அப்பாடலின் அடையாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் புகை உணர் கருவிகளை வாரம் ஒருமுறை சோதனை செய்ய வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் அந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment