Advertisment

வீடியோ: கனடா பிரதமரின் பாங்ரா நடனத்தால் நெட்டிசன்கள் அதிருப்தி

ஒருவார காலம் அரச முறை பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை இந்தியா வந்தடைந்தார். அவர் தாஜ்மஹாலுக்கு சென்றார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: கனடா பிரதமரின் பாங்ரா நடனத்தால் நெட்டிசன்கள் அதிருப்தி

ஒருவார காலம் அரச முறை பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை இந்திய வந்தடைந்தார். அவருடன் மனைவி சோஃபி ட்ரூடோ, மகள் எல்லா கிரேஸ், மகன்கள் சேவியர் மற்றும் ஹேட்ரியன் ஆகியோரும் வருகை தந்தனர்.

Advertisment

தொழிலதிபர்களுடன் ஆலோசனை, இருநாட்டு உறவை மேம்படுத்துதல் எல்லாவற்றையும் தாண்டி குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தார் ஜஸ்டின். குறிப்பாக, தாஜ்மஹாலுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு, சிறுவனாக இருந்தபோது தன் தந்தையுடன் தாஜ்மகாலுக்கு வந்த அனுபவங்களை ஜஸ்டின் பகிர்ந்துகொண்டார். அமிர்தசரஸ் கோவிலில் சப்பாத்தி செய்தார் ஜஸ்டின்.

இந்நிலையில், வியாழக்கிழமை டெல்லியில் உள்ள கனட இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜஸ்டின் ட்ரூடோ பாங்ரா நடனமாடினார்.

பலரும் அந்நடனத்தை சமூக வலைத்தளங்களில் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

அதேவேளையில், “இந்தியர்கள் எப்போதும் பாலிவுட் செட்டில் இருப்பதுபோல நடந்துகொள்ள மாட்டார்கள். திருமணத்திற்கு செல்வதுபோல் உடையணிய மாட்டார்கள்”, என பலரும் ஜஸ்டின் ட்ரூடோ நடனத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Justin Trudeau
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment