Advertisment

திருடர்களுக்கு வேலை வழங்கி திருத்திய சூப்பர் கம்பெனி

நம்மூரில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் நம் கையில் சிக்கினால், அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைக்காமல், தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருடர்களுக்கு வேலை வழங்கி திருத்திய சூப்பர் கம்பெனி

நம்மூரில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் நம் கையில் சிக்கினால், அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைக்காமல், சரமாரியாக தாக்கும் சம்பவங்கள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வழிப்பறியில் ஈடுபடுபவர்களை மரம், மின்கம்பத்தில் கட்டிவைத்து நையப்புடைக்கும் சம்பவங்களும் ஏராளம். ஆனால், கனடாவில் நடைபெற்ற சம்பவம் சற்று வித்தியாசமாக இருந்தது. அங்கு பெண்ணின் பர்ஸை திருடிக்கொண்டு ஓடியவரை பிடித்த மற்றொரு பெண், அவருக்கு காபி வாங்கிக்கொடுத்து அசத்திய சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது.

Advertisment

இப்போது, அச்சம்பவத்தை மிஞ்சும் வகையில், நியூஸிலாந்தில் தங்கள் நிறுவனத்தில் திருட வந்த கொள்ளையர்களுக்கு அந்நிறுவனம் வேலை வழங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து, ஸ்மித் கிரேன் அண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனம் தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அவர்களிடம் சில நல்ல பண்புகள் இருக்கும் எனவும், அதனால், திருடுவதை கைவிட்டு உழைக்க வேண்டும் எனக்கூறி வேலை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, இரவில் பணி செய்தல், சாதனங்களை கையாளுதல் ஆகியவற்றில் திருடர்கள் திறன் பெற்றவர்கள் எனக்கூறியுள்ள அந்நிறுவனம், அதனாலேயே அவர்களுக்கு பணி வழங்கியதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

https://www.facebook.com/media/set/?set=a.1605578952863183.1073741954.495197717234651&type=1&l=40831ab27d

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment