Advertisment

மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி; 5-ம் இடம் பிடித்து 82 வயது பாட்டி அசத்தல்

வயது ஒரு தடை இல்லை; பளு தூக்கும் போட்டியில் சாதித்த 82 வயது பாட்டி; வைரல் வீடியோ

author-image
WebDesk
New Update
kovai granny

வயது ஒரு தடை இல்லை; பளு தூக்கும் போட்டியில் சாதித்த 82 வயது பாட்டி; வைரல் வீடியோ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை உடற்பயிற்சி கூடத்தில் நடந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் முதல் முறையாக ஐந்தாவது இடத்தைப் பிடித்த 82 வயது கிட்டம்மாள் அசத்தல், பார்வையாளர்கள் கைதட்டி ஊக்கப்படுத்தினர். 

Advertisment

பொள்ளாச்சி அருகே உள்ள முத்து கவுண்டனூர் பகுதி சேர்ந்த வெங்கட்ராமன் இவரது மனைவி கிட்டம்மாள் (82). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் இவருக்கு ஆண் உட்பட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மூன்றாவது பெண் வீடு பல்லடத்தில் உள்ளது.

பேரக்குழந்தைகள் பளு தூக்கி பயிற்சி செய்வதை பார்த்து கிட்டம்மாள் அவர்களுக்கு தானும் இம்மாதிரியான பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்று தீராத ஆசை இருந்துள்ளது. இதை அடுத்து பல்லடம் சென்ற கிட்டம்மாள், பல்லடம் பகுதியில் சதீஷ் என்பவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும், பயிற்சி கூடத்தில் பளு துக்கும் போட்டி நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட கிட்டம்மாள் பளு தூக்கி அசத்தினார். இதைக் கண்ட பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி கிட்டம்மாளை உற்சாகப்படுத்தினர். பின்னர் பேசிய கிட்டம்மாள், வயது ஒரு தடை இல்லை, தனக்கு ஆசை நிறைவேறியதாக தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment