Advertisment

”வீடியோவில் நடனமாடுவது மோடியின் தாயார் இல்லை”: தவற்றை உணர்ந்த கிரண்பேடி

கிரண்பேடி தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்திருந்த நிலையில், அதிலிருப்பது மோடியின் தாயார் அல்ல என்பதை தற்போது உணர்ந்திருக்கிறார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Narendra modi,Kiranbedi, Modi mother, heraben modi,

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் தீபாவளியை உற்சாக நடனத்துடன் கொண்டாடுவதாக, கிரண்பேடி தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்திருந்த நிலையில், அதிலிருப்பது மோடியின் தாயார் அல்ல என்பதை தற்போது உணர்ந்திருக்கிறார்.

Advertisment

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தன் ட்விட்டர் பக்கத்தில் கடந்த வியாழக்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ”பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 97 வயதிலும், நம்பிக்கையுடனும், எளிமையாகவும் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறார்.”, என பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், மோடியின் தாயார் போன்று தோற்றம்கொண்ட வயதான பெண்மனி, தீபாவளி பண்டிகைய நடனமாடி கொண்டாடுகிறார்.

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், நடனமாடும் பெண்மணி, பிரதமர் மோடியின் தாயார் அல்ல என்பது தெரியவந்தது. அரசியல் விமர்சகர் சுமந்த்.சி.ராமன், அந்த வீடியோவில் நடனமாடுவது பிரதமர் மோடியின் தாயார் அல்ல என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த வீடியோவில் நடனம் ஆடுவது நரேந்திரமோடியின் தாயார் அல்ல என்பதை ஒத்துக்கொண்டார். மேலும், ”இவ்வளவு வீரியத்துடன் இருக்கும் மூதாட்டிக்கு வணக்கங்கள். எனக்கு 96 வயதாகும்போது நானும் அவரைபோல் இருப்பேன் என நம்புகிறேன்”, எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment