Advertisment

இந்த போட்டோவுல இருக்குற பாம்பை கண்டுபிடிக்க முடியுதா?

இந்த புகைப்படத்தில் பாம்பு ஒன்று மறைந்துள்ளது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? கண்டுபிடிக்க முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக்கலாம்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
snake

புதிர்கள் என்றால் அதனை எப்படியாவது கண்டுபிடித்து விடவேண்டும் என்ற ஆர்வம் யாருக்குத் தான் இருக்காது! அதிலும், குறிப்பிடும்படியாக, முடிந்தால் கண்டுபிடித்து காட்டுங்கள் பார்க்கலாம், என்று சவால் விட்டால் சும்மா விட்டுவிடுவோமா என்ன.

Advertisment

அப்படி ஒரு சவால் தான் தற்போது உங்களுக்கு. முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இந்த புகைப்படத்தில் பாம்பு ஒன்று மறைந்துள்ளது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? கண்டுபிடிக்க முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக்கலாம்.

என்ன கண்டுபிடிக்க முடியலயா? இபோ கொஞ்சம் ஜூம் செய்துள்ள ஃபோட்டோவ பாத்தாவது கண்டுபிடிங்க.

இன்னமும் கண்டு பிடிக்க முடியலயா? சரி விடுங்க. ஒரு க்ளூ, அந்த பாம்பு இருக்குறது இந்த போட்டோவுக்கு மத்தியில்.

சரி கண்டுபிடிக்க முடியலன்னா, இந்த போட்டோவ பாத்து தெரிஞ்சுக்கோங்க.இதுல மறைந்திருக்குற பாம்பை தெளிவா பார்க்க முடியும்.

இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ள “Big Country Snake Removal” தகவலின்படி, இந்த பாம்பானது ப்ராட்-பேன்டடென் காப்பர்ஹெட் வகையைச் சேர்ந்ததாம். விஷத்தன்மை வாய்ந்த இந்த பாம்பு அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன.

முன்னதாகவே இந்த போட்டோ இணைதளத்தில் வைரல் அடித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment