Advertisment

கையறு நிலையில் தந்தை: போதை பழக்கத்திலிருந்து 10 வயது மகளை காக்க சங்கிலியால் பூட்டி வைக்கும் அவலம்

தனது 10 வயது மகளை போதைப் பழக்கம் மற்றும் பாலியல் தொழிலில் சிக்கிக்கொள்வதை தடுக்க, அச்சிறுமியை அவரது தந்தை சங்கிலியால் பூட்டி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
கையறு நிலையில் தந்தை: போதை பழக்கத்திலிருந்து 10 வயது மகளை காக்க சங்கிலியால் பூட்டி வைக்கும் அவலம்

தனது 10 வயது மகளை போதைப் பழக்கம் மற்றும் பாலியல் தொழிலில் சிக்கிக்கொள்வதை தடுக்க, அச்சிறுமியை அவரது தந்தை சங்கிலியால் பூட்டி வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

இந்த புகைப்படத்தை வங்கதேசத்தை சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.எம்.பி.ஆகாஷ் என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இவர் தன் முகநூல் பக்கத்தில் மனதை நெகிழும் விதத்திலான சம்பவங்கள் மற்றும் மனிதர்களை அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து அதனை பகிர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பதிவில் ஆகாஷ் குறிப்பிட்டிருந்ததாவது:

10 வயது சிறுமி சாண்டாவின் தாயார் இறந்த நிலையில், அடிக்கடி அச்சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போய்விடுகிறார். இதனால், அவருடைய தந்தை கமல் ஹாசின் (வயது 40) அவளை தேடி கண்டுபிடிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பார். அவர் காலணிகள் தைத்து மாதத்திற்கு சுமார் 4,000 ரூபாய் வரை மட்டுமே வருமானம் ஈட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தன் மகள் காணாமல்போனபோது, அவளை பாலியல் தொழிலாளிகள் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் குழுவின் மத்தியில் சிக்கியதை கண்டு அவர்களிடமிருந்து மீட்டார்.

“கடந்த 8 மாதங்களாக அடிக்கடி என் மகள் காணாமல் போய் விடுவாள். ஒருமுறை 10 நாட்களாக என் மகளை காணவில்லை. துயரத்தில் நான் இறந்துவிடுவேன் என தோன்றியது. எல்லா இடங்களிலும் அவளை தேடி பார்த்து அவளை கண்டுபிடித்தேன்”, என்கிறார் உதவி செய்ய ஆளில்லாமல் தவிக்கும் அத்தந்தை.

“நான் எப்போதெல்லாம் அந்த சங்கிலியில் இருந்து அவளை விடுவிக்கிறேனோ அப்போதெல்லாம் அவள் காணாமல் போய்விடுவாள். என்னுடைய சம்பளத்தின் மூலம் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இப்பழக்கத்திலிருந்து விடுவிக்க முடியாது.”, என கூறினார்.

“அவளது காலை சங்கிலியால் பூட்டும் போதெல்லாம் நான் இறந்துவிடுவது போல் இருக்கும். எனக்கு அழுகை வரும். ஆனால், ஏதும் தெரியாத என் மகளை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவளை பாதுகாக்க அவளுக்கு தாயும் இல்லை”, என வேதனை அடைகிறார் அச்சிறுமியின் தந்தை.

இந்த புகைப்படத்தை ஆகாஷ் பகிர்ந்ததிலிருந்து பலரும் அவளை போதை பழக்கத்திலிருந்து மீட்க உதவிபுரிய முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment