Advertisment

செம்ம ‘கேஷூவல்’ மொமண்ட்: விமான நிலையத்தில் படுத்திருக்கும் தல தோனியின் வைரலாகும் புகைப்படம்

‘தல’ தோனி கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு ”நான் எப்போதும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவன்” எனக்கூறும் விதத்தில் படுத்துக் கொண்டிருந்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
M.S.Dhoni, Virat Kohli,Hardik Pandya, chennai airport

இந்திய கிரிக்கெட் அணியின் ‘தல’ தோனி பல சமயங்களில் கேஷூவலாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும். இப்போது, அதேபோல் மற்றுமொரு தோனியின் சர்வ சாதாரண மொமண்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது, சென்னை விமான நிலையத்தில், தோனி கேஷூவலாக படுத்திருக்கும் புகைப்படம்.

Advertisment

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த 17-ஆம் தேதி சென்ன சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நீண்ட காலத்துக்குப் பிறகு சென்னையில் விளையாடும் தோனியை சென்னை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவரின் ஆட்டத்தைக் கண்டு ஆர்ப்பரித்தனர்.

போட்டிக்குப் பின், இந்திய அணியின் வீரர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றனர். அப்போது, விமான நிலையத்தில், தோனி மற்றும் சக வீரர்கள் கேஷூவலாக இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

அந்த புகைப்படத்தில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட சக வீரர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால், ‘தல’ தோனி கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு ”நான் எப்போதும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவன்” எனக்கூறும் விதத்தில் படுத்துக் கொண்டிருந்தார். இந்தப் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“தோனி எப்போதும் வித்தியாசமானவர் தான்”, “தோனி மிக எளிமையானவர்”, “என பலரும் அந்த புகைப்படத்துக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Virat Kohli Hardik Pandya Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment