Advertisment

மகள் வேண்டாமென்று சொல்ல மாட்டீர்கள், தந்தைக்கு சிறுநீரகம் தானம் அளித்த பெண்ணை பார்த்தால்

ஆம், அவருக்கு சிறுநீரகம் செயலிழந்தவுடன் சிறுநீரகம் தானம் அளித்தது யார் தெரியுமா? அவருடைய மகள் தான் சிறுநீரகம் தானமளித்து உயிரை காப்பாற்றியிருக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
, kidney transplant, love, humanity

பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்கு மகள்கள் வேண்டாம், மகன்கள் வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். ஆனால், அதுபோல இந்த தந்தையும் நினைத்திருந்தால் இப்போது அவர் உயிரோடு இருந்திருக்க மாட்டார். ஆம், அவருக்கு சிறுநீரகம் செயலிழந்தவுடன் சிறுநீரகம் தானம் அளித்தது யார் தெரியுமா? அவருடைய மகள் தான்.

Advertisment

நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என எல்லோரும் நினைப்பது இயல்புதான். ஆனால், இந்தப் பெண் ஒருபடி மேலே போய் தன் தந்தைக்கு சிறுநீரகம் தானம் அளிக்கவே முன்வந்துள்ளார்.

இதுகுறித்து, மருத்துவர் ரச்சித் பூஷன் என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தன் தந்தையின் அறுவை சிகிச்சைக்கு பின் அவருடன் அப்பெண் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment