Advertisment

சியோமி ரெட்மி நோட் 5 விரைவில் அறிமுகம்... 5.99 இன்ச் டிஸ்ப்ளே, 4000mAh பேட்டரி என தகவல்

சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் என தகவல்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Xiaomi, Xiaomi Redmi Note 5, 4000mAh battery, 18:9 display,

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனமானது சமீபத்தில் சியோமி ரெட்மி 5ஏ என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்திருந்தது.

இந்த நிலையில், தற்போது சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனை வெளியிட சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, சீனாவில் இணையதளத்தில் ரெட்மி நோட் 5 குறித்து சில தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பார்க்கும்போது, சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் பின்வரும் சிறப்பம்சங்களை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  • 5.99 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்ப்ளே (5.99-inch full-HD+ 2.5D curved glass display)
  • ஆக்டா-கோர் பிராசஸரில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 3ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் என இரண்டு வகையில் வெளிவரலாம்.
  • மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 128 ஜி.பி மூலமாக ஸ்டோரேஜை அதிகரிக்கலாம்.
  • ஆண்ட்ராய்டு நௌகட் 7.1.2 இயங்குதளம்
  • கேமராவை பொறுத்தவரையில், 12 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • ரெட்மி நோட் 4-ல் 4100mAh பேட்டரி திறன் உள்ள நிலையில், ரெட்மி நோட் 5-ல் 4000mAh பேட்டரி திறன் உள்ளதாம்.
  • போனின் பின்புறத்தில் ஃபிண்கர்ஃபிரிண்ட் ஸ்கேனர் உள்ளதாக தெரிகிறது.
Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment