Advertisment

சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன்(Xiaomi Redmi 5A) சீனாவில் அறிமுகம்!

சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Xiaomi Redmi, Xiaomi Redmi 5A, MIUI 9, 3,000mAh battery, China, Smartphones,

சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி 4ஏ ஸ்மார்ட்போனின் சக்சஸை தொடர்ந்து சியோமி ரெட்மி 5ஏ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஷாம்பெயின் கோல்டு, ஜெர்ரி மற்றும் பிளாட்டினர் கோல்டு ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

Advertisment

சீன மதிப்பில் 599 Yuan (இந்திய மதிப்பில் ரூ.6,000) என்ற விலையில் சியோமி ரெட்மி 5ஏ விற்பனைக்கு வரவுள்ளது. வரும் திங்கள் கிழமை முதல் இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு சீனாவில் தொடங்குகிறது.

சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

5 இன்ச் எச்.டி டிஸ்ப்ளே(ரெசொலூசன் 280 x 720 பிக்சல்ஸ்) குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 ப்ராசஸரை கொண்டிருக்கும் இந்த சியோமி 5ஏ ஸ்மார்ட்போனில் 2 ஜி.பி ரேம் மற்று 16 ஜி.பி ஸ்டோரேஜ் உள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 128 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமராவை பொறுத்தவரையில் 13 எம்.பி ரியர் கேமரா, 5 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.3000mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது. ஆனால், சியோமி ரெட்மி 4ஏ ஸ்மார்ட்போனில் 3,120mAh பேட்டரி திறன் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. சியோமி 4ஏ ஸ்மார்ட்போனில் சின்னச்சின்ன சிறப்பம்சங்களை அப்கிரேடு செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக, ரெட்மி 5ஏ-வை கருதலாம்.

Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment