Advertisment

சியோமியின் அடுத்த வெளியீடு... எம்.ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சியோமி நிறுவனமானது தனது அடுத்த ஸ்மார்ட்போனான எம்.ஐ மிக்ஸ் 2 (Xiaomi Mi Mix 2) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Xiaomi, Xiaomi Mi Mix 2, Smartphones,

சியோமி நிறுவனமானது தனது அடுத்த ஸ்மார்ட்போனான எம்.ஐ மிக்ஸ் 2 (Xiaomi Mi Mix 2)ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 8, ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன் ஆகியவற்றை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த எம்.ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Advertisment

மெட்டல் உடலமைப்பை பெற்றுள்ள எம்.ஐ மிக்ஸ் 2 (Xiaomi Mi Mix 2)ஸ்மார்ட்போன், 5.99 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. ஸ்னாப் டிராகன் 835 ப்ராசஸரை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜி.பி ரேம் மற்றம் 8 ஜி.பி ரேம் ஆகிய இரண்டு வகையில் வெளிவருகிறது. 6 ஜி.பி ரேம் கொண்டு வெளிவரும் ஸ்மார்ட்போனானது, 64 ஜி.பி, 128 ஜி.பி மற்றும் 256 ஜி.பி ஆகிய ஸ்டோரேஜில் வெளிவருகிறது. 8 ஜி.பி ரேம் கொண்டுள்ள மற்றொரு வகை 128 ஜி.பி ஸ்டோரேஜில் வெளிவருகிறது.

கேமரா வசதியைப் பொறுத்தவரையில் டுயல் எல்.இ.டி ப்ளாஷ் லைட்டுடன் கூடிய 12 எம்.பி சிங்கிள் ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் 7.1 இயங்குதளத்தில் இயங்கக்கூடியது. 3400mAh பேட்டரி திறனை கொண்டுள்ள இந்த சியோமி எம்.ஐ மிக்ஸ் 2 (Xiaomi Mi Mix 2)ஸ்மார்ட்போனில், விரைவாக சார்ச்(Quick Charge 3.0.) வசதியையும் கொண்டிருக்கிறது. 6 ஜி.பி ரேம் கொண்ட சியோமி எம்.ஐ மிக்ஸ் 2 (Xiaomi Mi Mix 2)ஸ்மார்ட்போனானது ப்ளாக் கலரில் வெளிவருகிறது.

6GB ரேம் +64 ஜி.பி மாடல் சீன மதிப்பில் RMB 3,299 (தோராயமான இந்திய மதிப்பு ரூ. 32,335), 6GB ரேம் +128 ஜி.பி மாடல் சீன மதிப்பில் RMB 3,599 (தோராயமான இந்திய மதிப்பு ரூ. 35,275), 6ஜி.பி ரேம்+ 256 ஜி.பி சீன மதிப்பில் RMB 3999 ( தோராயமாக இந்திய மதிப்பு ரூ.39,196). 8ஜி.பி+ 128 ஜி.பி மாடல் சீன மதிப்பில் RMB 4,699 (தோராயமான இந்திய மதிப்பு ரூ. 46,057).

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் நாளை( செப்டம்பர் 12) அறிமுகமாகவுள்ள நிலையில், சியோமி நிறுவனமானது இந்த எம்.ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனை இன்று(திங்கள் கிழமை) வெளியிட்டுள்ளது.

Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment