Advertisment

Twitter Vs Threads: ட்விட்டரில் இருக்கும் இந்த அம்சங்கள் த்ரெட்ஸ் செயலியில் இல்லை

Twitter Vs Threads: ட்விட்டருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டாவின் த்ரெட்ஸ் செயலியில் இந்த அம்சங்களை காண முடியாது.

author-image
sangavi ramasamy
New Update
Threads

Meta's Threads

மெட்டா நிறுவனத்தின் சமீபத்திய மைக்ரோ பிளாக்கிங் தளமான த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 4 நாட்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்று அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் குழுவினரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட த்ரெட்ஸ் ட்விட்டரைப் போன்ற தனித்துவமான இன்டர்ஃபேசைக் கொண்டுள்ளது.

Advertisment

இருப்பினும் த்ரெட்ஸ் செயலியில் அதிக அம்சங்கள் இடம் பெறவில்லை. குறைவான வசதிகளே உள்ளன. ட்விட்டரில் இருக்கும் பல அம்சங்கள் இதில் இல்லை. அது குறித்து இங்கு பார்ப்போம்.

ஹேஷ்டேக் இல்லை

ட்விட்டர் ஹேஷ்டேக் மிகவும் பிரபலமானது. ட்ரெண்டிங் என்ற அம்சத்திற்கு பெயர் போனது. மெட்டாவின் த்ரெட்ஸ் செயலியில் ஹேஷ்டேக் இல்லை. இருப்பினும், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற மெட்டாவின் பிற சமூக ஊடக தளங்கள் பல ஆண்டுகளாக ஹேஷ்டேக் ஆதரவைக் கொண்டுள்ளன. அதனால் வரும் நாட்களில் த்ரெட்களும் அதைப் பெற வாய்ப்புள்ளது.

வெப் வெர்ஷன் இல்லை

ட்விட்டரை எந்த வெப் ப்ரௌசரிலும் பயன்படுத்த முடியும். த்ரெட்ஸ் தற்போது செயலியாக மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம், Threads.net இருந்த போதிலும், அது ஆப்-ஆக டவுன்லோடு செய்ய மட்டும் அனுமதிக்கிறது.

எடிட் வசதி இல்லை

ட்விட்டர் சமீபத்தில் அதன் பிரீமியம் பயனர்களுக்கு ட்வீட்களை எடிட் செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது. தற்சமயம், த்ரெட்ஸ் போஸ்ட் எடிட் செய்யும் வசதி கொண்டு வரவில்லை.

DM ஆப்ஷன் இல்லை

த்ரெட்ஸ் செயலியில் டிரெக்ட் மெசேஜ் (DM) என்ற ஆப்ஷன் இல்லை. அதோடு சமீபத்தில் தான் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை கொண்டுவந்தது. த்ரெட்ஸ் பயனர் தனியாக மற்றொருவருக்கு மெசேஜ் செய்ய முடியாது.

ட்ரெண்டிங் செக்ஷன் இல்லை

ட்விட்டரில் நடக்கும் செய்திகளைக் கண்டறிவதற்கான எளிதான வழிகளில் டிரெண்டிங் செக்ஷன் மிகவும் பிரபலமானதாகும். த்ரெட்ஸில் இந்த ட்ரெண்டிங் செக்ஷன் இல்லை. தி வெர்ஜ் உடனான ஒரு உரையாடலில், இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், த்ரெட்ஸ் "ஹார்ட் நியூஸ்" க்கான தளம் இல்லை. அதனால் இது இப்போதைக்கு டிரெண்டிங் டாப்பிக் செக்ஷன் பெற வாய்ப்பில்லை என்றார்.

விளம்பரங்கள் இல்லை

இது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும், ட்விட்டர் தற்போது விளம்பரங்களால் நிரம்பி வழிகிறது. த்ரெட்ஸ் 1 பில்லியன் பயனர்களைப் பெறும் வரை விளம்பரங்கள் பெறாது என்று மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

Can't embed Threads post

Embed அம்சம் குறிப்பாக செய்தி நிறுவனங்களில் பயனுள்ளதாக உள்ளது. ட்விட்டர் நீண்ட காலமாக இந்த அம்சத்தை வழங்கி வருகிறது. த்ரெட்ஸ் செயலில் இது இல்லை. த்ரெட்ஸ் பதிவை Embed செய்ய அனுமதிக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Twitter Meta
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment