Advertisment

சோனி எக்ஸ்பீரியா XZ1 (Sony Xperia XZ1) ஸ்மார்ட்போன்... 3D ஸ்கேனிங் கேமரா வசதியுடன் வெளியீடு!

சோனி எக்ஸ்பீரியா XZ1 (Sony Xperia XZ1) ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று வெளியிடப்பட்டது.. ரூ.44,990 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sony Xperia XZ1, Sony, Smartphones, napdragon 835 SoC,

சோனி எக்ஸ்பீரியா XZ1 (Sony Xperia XZ1) ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரூ.44,990 என்ற விலையில் விற்பனைக்கு வரும் இந்த சோனி எக்ஸ்பீரியா XZ1 (Sony Xperia XZ1) ஸ்மார்ட்போனாது, இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ள முடியும்.

Advertisment

சோனி எக்ஸ்பீரியா XZ1 (Sony Xperia XZ1) போனின் சிறப்பம்சத்தை பொறுத்தமட்டில், 5.2 இன்ச் (1080p IPS) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 835 ப்ராசஸருடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனாது, 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜை கொண்டிருக்கிறது. கேமரா சிறப்பம்சத்தை பொறுத்தவரையில் 19 எம்.பி ரியர் கேமராவும், 13 எம்.பி செல்ஃபி கேமராவும் உள்ளது. 2700 mAh பேட்டரி திறனை பெற்றிருக்கும் இந்த சோனி எக்ஸ்பீரியா XZ1 (Sony Xperia XZ1) ஸ்மார்ட்போன், ஆணட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

2700 mAh என்ற பேட்டரி திறன் உள்ள நிலையில் ஒருமுறை சார்ச் செய்தால், நாள் முழுவதும் தாக்குபிடிக்கும் என சோனி நிறுவனம் தெரிவிக்கிறது. 3டி ஸ்கேனிங் சிறம்பம்சத்தின் மூலம் போட்டோ எடுக்கும்போது, அந்த போட்டோ தானாக 3டி-யாக மாறிக் கொள்ளுமாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஆப்பிள் 8 சீரியஸ் ரூ.64,000-ல் இருந்து தொடங்குகிறது. இதேபோல, சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான சாம்சங் கேலக்ஸி நோட் 8 ரூ.67,900- என்ற விலையில் வெளிவருகிறது. இந்த நிலையில், சோனி நிறுவனமானது சோனி எக்ஸ்பீரியா XZ1 (Sony Xperia XZ1)ஸ்மார்ட்போனை ரூ.44,990 என்ற விலையில் வெளியிட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment