Advertisment

டுயல் ரியர் கேமரா வசதியுடன் சாம்சங் கேலக்ஸி சி8 (Samsung Galaxy C8) அறிமுகம்!

சீனாவில் சாம்சங் கேலக்ஸி சி8 (Samsung Galaxy C8) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
samsung_galaxyc8_, smartphones

சாம்சங் நிறுவனமானது தனது அடுத்த தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி சி8 (Samsung Galaxy C8) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. டுயல் கேமரா வசதியுடன் சாம்சங் வெளியிட்டு வரும் ஸ்மார்ட்போன் வரிசையில் இந்த சாம்சங் கேலக்சி சி8 இடம்பிடித்துள்ளது. இந்த சாம்சங் சி8Samsung Galaxy C8) ஸ்மார்ட்போனின் விலை என்னவென இன்றும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என்றபோதிலும், சீன இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது.

Advertisment

கேமரா சிறப்பம்சத்தை பொறுத்தவரையில், கேலக்ஸி சி8 ஸ்மார்ட்போனில் 13எம்.பி மற்றும் 5 எம்.பி என டுயல் ரியர் கேமரா சிறப்பம்சத்தை பெற்றுள்ளது. ரியர் கேமரா ஆட்டோ-ஃபோகஸ் மற்றும் எல்.இ.டி ஃப்ளாஷை கொண்டுள்ளது. 16 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் ஸ்கேனரும் (facial recognition scanner) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. பாஸ்வேர்டு, பாஸ்கோடு, ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் போன்றவற்றை பயன்படுத்தி அன்லாக் செய்வது போல, முகத்தை அடையாளமாக வைத்து இந்த ஸ்மார்ட்போனில் அன்லாக் செய்யும் வசதி உள்ளது. போனின் பின்புற பகுதியில் ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.

  • வாய்ஸ் கமென்ட்க்கு ஏற்றவாறு செயல்படக் கூடிய சிறப்பம்சத்தை கொண்டுள்ளது (Bixby voice assistant)
  • 5.5 இன்ச் ( Super AMOLED) டிஸ்ப்ளே(1920×1080 பிக்சல்ஸ் ரிசொலூசன்).
  • 3 ஜி.பி ரேம் மற்றும் 32ஜி.பி ஸ்டோரேஜ் அல்லது 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ். மேலும், மைக்ரோ எஸ்.டி கார்டு 256 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.
  • 2.39Ghz ஆக்டா-கோர்-ப்ராசஸர்
  • 3000mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது.
  • சாம்சங் கேலக்ஸி சி8 (Samsung Galaxy C8) ப்ளாக், கோல்டு, ரோஸ் கோல்டு ஆகிய நிறங்களில் வெளிவருகிறது.

சீனாவில் இந்த சாம்சங் கேலக்ஸி சி8 (Samsung Galaxy C8) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றபோதிலும், இந்தியாவில் எப்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து சாம்சங் நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment