ஜியோ “தீபாவளி தன் தனா தன்” ஆஃபர்... ரூ.399 ரீசார்ச் செய்தால் 100% கேஷ்பேக்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தீபாவளி “தன் தனா தன்” ஆஃபருடன் 100 சதவீத கேஷ் பேக் ஆஃபரை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு தன் தனா தனா ஆஃபருடன் 100 சதவீத கேஷ் பேக் ஆஃபரை அறிவித்துள்ளது. இன்று முதல் (12-10-17 முதல் 18-10-17)ஒருவார காலத்திற்கு ஜியோ நிறுவனமானது இந்த ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.399 ரீசார்ச் செய்யும் போது ரூ.50 விதம் எட்டு கூப்பன்கள் திரும்ப கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூப்பன் தொகையை நவம்பர் 15-ம் தேதி முதல் ரீடிம் செய்து கொள்ள முடியும். நவம்பர் 15-ம் தேதிக்கு பின்னர் நீங்கள் ஒருவேளை ரூ.309-க்கு ரீசார்ச் செய்ய விரும்பினால், ரூ.259 தொகை செலுத்தினால் போதுமானது. ஒருமுறை ரீசார்ச் செய்கையில், ஒரே ஒரு ரூ.50 கூப்பனை மட்டுமே ரீடீம் செய்ய முடியுமாம்.

தீபாவளி தன் தனா தன் ஆஃபரின் காலகட்டத்தில் ரூ.399 ரீசார்ச் செய்யும் பட்சத்தில், அதற்கான கேஷ்பேக் கூப்பன்கள் உடனடியாக கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். இந்த கூப்பன்களை ஜியோ ஆப்-ல் உள்ள மை வவுச்சர் என்ற பிரிவில் காண முடியும். மேலும், இந்த கூப்பன் தொகையை ஒரு ஜியோ நம்பரில் இருந்து மற்றொரு ஜியோ நம்பவருக்கு டிரான்ஸ்பர் செய்யவும் முடியும் என ஜியோ வாடிக்கைளார் மையத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்கள் தற்போதைய ஃபிளானில் சலுகைகளை அனுபவித்து வந்தாலும், ரூ.399 என்ற தன் தனா தன் ஆஃபரில் ரீசார்ச் செய்யலாம். அவ்வாறு செய்யும்போது, தற்போதைய ஃபிளானே தொடர்ந்து இருக்கும். தற்போதைய ஃபிளான் முடிவடைந்த பின்னரே, ரூ.399 என்ற தீபாவளி “தன் தனா தன் ஃபிளான்” ஆக்டிவேட் செய்யப்படும் என ஜியோ தெரிவித்துள்ளது.

ரூ. 399 ஃப்ளான்?

ரூ.399 ப்ளானின் கீழ் நாள் தோறும் 1 ஜி.பி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ் இலவசமாக பெற முடியம். இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஜியோ நிறுவனமானது தற்போதைய ஃபிளான்களை அக்டோபர் 19-ம் தேதி முதல் ரிவைஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜியோவின் ஜியோபோனுக்கு போட்டியாக ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.1399-ல் அறிமுகம்! ஜியோ vs ஏர்டெல் எப்படி?

×Close
×Close