Advertisment

மோட்டோரோலாவின் அடுத்த ஸ்மார்ட்போன்... மோட்டோ எக்ஸ்4 (Moto X4) அறிமுகம்!

மோட்டோ எக்ஸ்4 (Moto X4) ஸ்மார்ட்போன் ஐ.எஃப்.ஏ(IFA 2017) டெக்னாலஜி ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mottorola, motox4

மோட்டோரோலாவின் மோட்டோ எக்ஸ்4 (Moto X4) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஐ.எஃப்.ஏ(IFA 2017) டெக்னாலஜி ஷோவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டுயல் ரியர் கேமரா மற்றும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராசஸர் ஆகியற்றுடன் ஆண்ட்ராய்டு நௌகட் 7.1.1. இயங்கு தளத்தில் இயங்கக்கூடியது.

Advertisment

மோட்டோ எக்ஸ்4 (Moto X4) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

  • 3000 mAh திறன் கொண்ட பேட்டரியை மோட்டோ எக்ஸ்4 (Moto X4) ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 6 மணி நேர பேட்டரி திறனுக்கு, வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக 15W டர்போபவர் கொண்ட சார்ஜர் வழங்கப்படுகிறது.
  • டுயல் ரியர் கேமராவை பொறுத்தவரையில் , 12 எம்.பி மற்றும் 8 எம்.பி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, 16 எம்.பி அசத்தலான செல்ஃபி கேமராவும் உள்ளது. ரியர் கேமராரா “பொக்கே”(தேவையான பகுதி தெளிவாகவும், மற்ற பகுதிகள் மங்களாகவும் இருக்கும் நிலை) என்ற சிறம்பம்சத்தை கொண்டுள்ளது.

    Motorola, moto, மோட்டோ எக்ஸ்4 (Moto X4) ஸ்மார்ட்போனில் உள்ள டுயல் ரியர் கேமரா அமைப்பு(12MP + 8MP sensor combination.)

  • 5.2 இன்ச் FHD (1080×1920)டிஸ்ப்ளே,
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ப்ராசஸர்
  • 3ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக அதிகரித்துக் கெள்ள முடியும்)
  • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்ட்டன்ஸ் தன்மையைப் பொறுத்தவரையில், IP68 ரேட்டிங்கை பெற்றுள்ளது.
  • “Quick Screenshot” வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்கிரீனில் மூன்று விரல்களை வைத்து ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொள்ள முடியுமாம். சிங்கிள் சிம் ஸ்மார்ட்போனான இந்த மோட்டோ எக்ஸ்4 (Moto X4) : Fingerprint Reader, ravity, Proximity, Accelerometer, Ambient Light, Magnetometer, Gyroscope and Sensor Hub,உள்ளிட்ட பல்வேறு சிறம்பம்சங்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் மோட்டோ எக்ஸ்4 (Moto X4) ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து அந்த நிறுவனம் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

Motorola
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment