Advertisment

HP ஸ்பெக்டர் X360 15 இன்ச் லேப்டாப் எப்படி?

புதிய ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 லேப்டாப் 8வது ஜெனரேஷன் Intel Core i7-8705G Processor மற்றும் Radeon RX Vega graphics உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
HP ஸ்பெக்டர் X360 15 இன்ச் லேப்டாப் எப்படி?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகில் நடைபெற்ற சி.இ.எஸ் 2018 விழாவில், ஹெச்.பி. நிறுவனம் புதிய ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 இன்ச் கன்வெர்டிபிள் லேப்டாப் மற்றும் ஹெச்.பி. என்வி X2 ஹைப்ரிட் லேப்டாப் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை மட்டுமின்றி, ஹெச்.பி. என்வி X2 ஹைப்ரிட் லேப்டாப் மற்றும் பல்வேறு இதர சாதனங்களை ஹெச்.பி. அறிமுகம் செய்துள்ளது.

Advertisment

புதிய ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 லேப்டாப் 8வது ஜெனரேஷன் Intel Core i7-8705G Processor மற்றும் Radeon RX Vega graphics கொண்ட உலகின் முதல் லேப்டாப் ஆகும். 12 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இதன் மற்றொரு மாடலில் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் மற்றும் என்விடியா ஜீஃபோர்ஸ் MX 150 டிஸ்கிரீட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 13.5 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

புதிய 2 இன் 1 லேப்டாப் அலுமினியம் CNC மெஷின்டு சேசிஸ், 19.5 மில்லிமீட்டர் ப்ரோஃபைல் வழங்கப்பட்டிருக்கிறது. ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 மாடல் டார்க் ஆஷ் சில்வர் மற்றும் காப்பர் லூக்ஸ் அக்சென்ட் என ஒற்றை நிறத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

15.6 இன்ச் 4K 2160x3840 பிக்சல் UHD தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை IR கேமரா, விண்டோஸ் ஹெல்லோ மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment