Advertisment

நீண்ட நாள் எதிர்பார்ப்பு; இனி ஒரே நேரத்தில் 2 ஆப் டவுன்லோடு செய்யலாம்: கூகுள் ப்ளே ஸ்டோர் அசத்தல்

Google Play Store: நீண்ட நாட்களாக பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இனி ஒரே நேரத்தில் 2 செயலிகள் டவுன்லோடு செய்யலாம்.

author-image
WebDesk
New Update
Gplay store.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சிறந்த ஆப் ஸ்டோராக  கூகுள் ப்ளே ஸ்டோர் உள்ளது. பலரும் இந்த ஆப்-ஐ பயன்படுத்தி தங்களுக்கு வேண்டிய செயலிகளை டவுன்லோடு செய்து வருகின்றனர். எனினும் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரே நேரத்தில் ஒரு ஆப் மட்டுமே டவுன்லோடு செய்ய முடியும். இது பலருக்கும் கடினமாக இருந்து வந்தது. பயனர்கள் இதுகுறித்து கோரிக்கைகளும் வைத்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில், நிறுவனம் இதற்கு தீர்வு கொடுத்துள்ளது. ஒன்று இல்ல 2 இல்ல ஒரே நேரத்தில் பல்வேறு ஆப் டவுன்லோடு செய்யலாம். கூகுள் ப்ளே ஸ்டோர் புது அப்டேட் மூலம் நீங்கள் இதை செய்ய முடியும். இந்த அம்சம் தற்போதுஅனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Play-Store-update.jpeg

ஆண்ட்ராய்டு பயனர்கள் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 செயலிகள் டவுன்லோடு செய்யலாம். சமீபத்திய ப்ளே ஸ்டோர் வெர்ஷனுக்கு அப்டேட் செய்து பயன்படுத்தலாம். கூகுள் ப்ளே v40.6.31 or சமீபத்திய வெர்ஷனில் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என நிறுவனம் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment