தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பம்பர் ஆஃபர்களை வழங்கிவருகின்றன. ஒருவேளை ஸ்மார்ட்போன் வங்கும் நினைத்தால், இந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் வணிகதளமான பிளிப்கார் சியோமி எம் ஐ மேக்ஸ் 2 (Xiaomi Mi Max 2) அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த சியோமி எம் ஐ மேக்ஸ் 2 (Xiaomi Mi Max 2) ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999 ஆகும். இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனை ரூ.999 வாங்கும் வகையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை அறிவித்துள்ளது.

பிளிப்கார்டு நிறுவமானது சியோமி எம் ஐ மேக்ஸ் 2 (Xiaomi Mi Max 2)ஸ்மார்ட்போனுக்கு ரூ.16,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை வழங்குகிறது. எனினும், குறிப்பிட்ட சில லக்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த விலையில் சியோமி எம் ஐ மேக்ஸ் 2 (Xiaomi Mi Max 2) ஸ்மார்ட்போனை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் எவ்வளவு தொகைக்கு உங்களது பழைய ஸ்மார்ட்போன் எடுக்கப்படும் என்பதை பிளிப்கார்டு இணையதளத்தில் அறிந்து கொள்ள முடியும். பிளிப்கார்டில் சியோமி எம் ஐ மேக்ஸ் 2 (Xiaomi Mi Max 2) ஸ்மார்ட்போன் வாங்கும் பக்கத்திற்கு சென்று, அதன் அருகில் இருக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்களது ஸ்மார்ட்போனில் *06# என்பதை அழுத்தும்போது வரும், ஐ.எம்.இ.ஐ நம்பரை பதிவிடவும். இதன் மூலம் உங்களது பழைய ஸ்மார்ட்போனின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு எவ்வளவு என்பதனை அறிந்து கொள்ள முடியும். அதோடு, ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சியோமி எம் ஐ மேக்ஸ் 2 (Xiaomi Mi Max 2) ஸ்மார்ட்போனின் ஹைலைட்ஸ்

  • 4 ஜி.பி ரேம் | 64 ஜி.பி ரோம் | 128 ஜி.பி வரை அதிகரித்துக்கொள்ளலாம்
  • 6.44 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்ப்ளே
  • 12 எம்.பி ரியல் கேமரா | 5 எம்.பி செல்ஃபி கேமரா
  • 5300 mAh பேட்டரி திறன்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டா கோர் ப்ராசஸர்