Advertisment

ஏர்டெல் அதிரடி ஆஃபர்: ரூ.349 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 100% பணமும் திரும்ப கிடைக்கும்

ஜியோ ரூ.399 ரீசார்ஜ் பிளானை வாங்குபவர்களுக்கு 100 சதவீதம் கேஷ் பேக் ஆஃபரை அறிவித்த மறுநாளே ஏர்டெல் இந்த ஆஃபரை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
airtel, relianceJIO, recharge offer, airtel 349 pack,

ஏர்டெல் நிறுவனம் ரூ.349 ரீசார்ஜ் பேக்-ஐ வாங்குபவர்களுக்கு 100 சதவீதம் கேஷ் பேக் ஆஃபரை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ரீசார்ஜ் பிளானை வாங்குபவர்களுக்கு 100 சதவீதம் கேஷ் பேக் ஆஃபரை அறிவித்த மறுநாளே ஏர்டெல் நிறுவனம் இந்த ஆஃபரை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஏர்டெல் ரூ.349 ரீசார்ஜ் பேக்கின் சிறப்பம்சங்கள்:

ஏர்டெல் ரூ.349 ரீசார்ஜ் பேக்-ஐ அந்நிறுவனத்தின் ‘மை ஏர்டெல்’ ஆப் பயனாளர்கள் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்கு பெற முடியும்.

இந்த பேக் மூலம், பயனாளர்கள் 28 நாட்களுக்கு தினந்தோறும் 1 ஜிபி இண்டர்நெட் வசதியையும், அன்லிமிடென் வாய்ஸ் கால்ஸ் ஆஃபரையும் பெற முடியும். மாதம் முழுதும் 1,000 நொடிகளும், ஒருநாளுக்கு 250 நொடுகளும் ஃப்ரீ வாய்ஸ் கால்ஸ் ஆஃபரை பயனாளர்கள் பெறுவார்கள். இந்த எல்லையை தாண்டி கால் செய்பவர்களுக்கு, நொடிக்கு 30 பைசா சார்ஜ் செய்யப்படும்.

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment