Advertisment

ஆற்றில் மூழ்கிய 8 நண்பர்களை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட இளைஞர்

படகு சவாரியின்போது அதிக எடையால் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், தன்னுடைய எட்டு நண்பர்களை காப்பாற்றிய 21 வயது இளைஞர்

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆற்றில் மூழ்கிய 8 நண்பர்களை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட இளைஞர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடத்தில் சவாரியின்போது அதிக கணம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், தன்னுடைய எட்டு நண்பர்களை காப்பாற்றிய 21 வயது இளைஞர் ஒருவர் தன் உயிரை காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisment

தமிழரசு என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக, தமிழரசு உட்பட 9 இளைஞர்கள் கடந்த திங்கள் கிழமை மாலையில் மேச்சேரி அருகே கூணாந்தியூர் எனுமிடத்தில் காவிரி ஆற்றின் கரைக்கு சென்றனர். அங்கு நண்பர்கள் அனைவரும் தமிழரசுவின் பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினர்.

அதன்பின், அங்கு ஓடத்தில் சவாரி செல்ல அவர்கள் அனைவரும் ஆசைப்பட்டனர். ஆனால், ஆபத்தான முறையில் ஒரே ஓடத்தில் 9 பேரும் சவாரி செல்ல வேண்டும் என விபரீத ஆசை அவர்களுக்கு ஏற்பட்டது. இதனை, ஓடத்தை ஓட்டுபவர் எச்சரித்ததாக தெரிகிறது. இருப்பினும், அவர்கள் உற்சாகம் காரணமாக ஒரே படகில் சவாரி சென்றனர்.

ஆனால், ஆற்றின் பாதி வழியிலேயே அதிக கணம் தாங்காமல் ஓடம் கவிந்தது.ஓடம் ஓட்டுபவர் பாதுகாப்பாக் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நண்பர்கள் அனைவரும் ஆற்றில் சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கவே, மதன்(21) என்ற இளைஞர் தனது எட்டு நண்பர்களையும் பத்திரமாக மீட்டுள்ளார்.

ஆனால், நீச்சல் நன்றாக தெரிந்த மதன் கடைசி நேரத்தில் நீரில் மூழ்கியதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மேச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் மதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவருடைய சடலத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. இறந்த இளைஞன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

அவரது உடல் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர். படகு ஓட்டியவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே ஓடத்தில் 9 பெர் சென்றதால், இன்று ஒருவர் உயிரிழக்க நேரிட்டது. அதனால், இளைஞர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும்போது, தங்களது உயிருக்கு ஆபத்து நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

Cauvery River Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment