Advertisment

தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கி ஏன் சட்டம் இயற்றக் கூடாது? நீதிபதி கிருபாகரன்

தாய் பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்க கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கி ஏன் சட்டம் இயற்றக் கூடாது? நீதிபதி கிருபாகரன்

மருத்துவப் படிப்பை முடித்து சிவகாசியில் உள்ள சித்தூர் ராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி மருத்துவராக 2015 மார்ச் 20ல் பணியில் சேர்ந்த ஐஸ்வர்யா, அதே ஆண்டு ஜூலை முதல் ஜனவரி வரை 6 மாத மாதம் பேறு கால விடுப்பு எடுத்துள்ளார். மருத்துவ மேற்படிப்பில் சேர 2 ஆண்டு காலம் பணியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு செய்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து மருத்துவ மேற்படிப்பில் சேர கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இடம் கிடைத்தது. ஆனால் 2 ஆண்டு கால பணியை முழுமையாக நிறைவு செய்யவில்லை என சிவகாசி சுகாதார சேவை துணை இயக்குனர் அவரை பணியில் இருந்த விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவரின் சேர்க்கையை கீழ்பாக்கம் மருத்துவமனை ரத்து செய்தது. இதை எதிர்த்து ஐஸ்வர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது, ஐஸ்வர்யா தற்காலிக பயிற்சியாளர் என்பதால் அவரின் பேறு கால விடுமுறையை கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவை பாரபட்சமின்றி செயல்படுத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் மத்திய அரசு, மாநில அரசின் சட்ட மற்றும் சுகாதார துறையை எதிர்மனுதாரராக இணைத்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே மருத்துவ மேற்படிப்பிற்கு முழு தகுதி பெற்றிருப்பதால் , அடுத்த ஆண்டு ஐஸ்வர்யா மருத்துவ மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்காமல் தேர்வு செய்ய உத்தரவிட்டார். மேலும், சட்டம் இயற்றுவது மட்டுமே போதாது. சட்டத்தின் பலன்கள் உரியவருக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து. இந்தியாவில் தாய்ப்பால் கொடுப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 99 ஆயிரத்து 500 குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு பலியாகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பது அதிகமாகி உள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 2016 ஆம் ஆண்டு முதல் உள்ளதை போல, பேறு கால விடுமுறையை 9 மாதகாலமாக  மத்திய அரசு ஏன் அதிகரிக்க கூடாது?

பேறு கால விடுப்பை அதிகரிக்காத மாநில அரசுகளை 1 வருட காலத்திற்குள் 9 மாதமாக உயர்த்த மத்திய அரசு ஏன் உத்தரவிட கூடாது?

பேறு கால பலன்களை தேசிய நலன் சார்ந்தது என அறிவித்து மத்திய அரசு ஏன் சட்டம் இயற்ற கூடாது?

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ளது போல் 6 மாத முதல் 2 வருடம் வரை குழந்தைகளுக்கு தாய்பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்க கூடாது?

மத்திய மாநில அரசு அலுவலகங்களில் குழந்தைகள் காப்பகம் ஏன் தொடங்க கூடாது?

பேறு கால காப்பீட்டு திட்டத்தை ஏன் கொண்டு வர கூடாது?

2 குழந்தைகளுக்கு மட்டுமே பேறு கால பயன்களை ஏன் கட்டாயமாக்க கூடாது?

இதை பெண்களிடம் ஏன் உத்தரவாதமாக பெறகூடாது?

பேறு கால விடுப்பு வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகள் ஏன் சட்டம் இயற்ற கூடாது?

நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை கொண்டு அரசு அலுவலகங்களில் தாய்பாலின் முக்கியத்துவம் குறித்து ஏன் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த கூடாது?

தாய் பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்க கூடாது?

குழந்தைகளுக்கான உணவு பொருட்களை விளம்பரம்படுத்துவதை தடை விதிக்கும் சட்ட பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா?

பொது இடங்களில் தாய்பால் தருவதற்கு தனி அறை அமைக்க சட்டம் இயற்றப்படுமா?

என்பன உள்ளிட்ட 15 கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இதுகுறித்து ஜனவரி 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.

Chennai High Court Justice Kirubakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment