Advertisment

“மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்” - விஷால்

‘மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்’ என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nadigar Sangam Elections Vishal

விஷால்

‘மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்’ என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற 24ஆம் தேதி 500 மதுக்கடைகளை மூட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 500 கடைகளில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை சேர்க்க வேண்டும் என விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று நான்காவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து, அதனை தொடங்கியும் வைத்தார்.

அமரர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 24ஆம் தேதி 500 மதுக்கடைகளை மூட இருப்பதாகத் தகவல் என செய்திகள் வெளியாகின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், க்ராஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள், அங்கிருக்கும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும், அரசு இன்னும் அவற்றுக்கு செவிசாய்க்கவில்லை.

எனவே, மூட இருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில், இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவன செய்யுமாறு தமிழக அரசையும், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் தினகரன் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இதேபோல் தமிழ்நாடு முழுக்க இருக்கும் பிரச்னைக்குரிய, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்தப் பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

Vishal Ttv Dhinakaran Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment