Advertisment

தமிழக அரசியலின் ‘நல்லக்கண்ணு’: 93-வது பிறந்தநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து

சாதிய ஒடுக்குமுறைகள், சமூக அநீதிகள், சுற்றுச்சூழல் சீரழிவுகள் ஏற்படும்போது அதிகார வர்க்கங்களுக்கு எதிராக தன் 93-வது வயதிலும் போர்க்கொடி தூக்க முடிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அரசியலின் ‘நல்லக்கண்ணு’: 93-வது பிறந்தநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து

சாதிய ஒடுக்குமுறைகள், சமூக அநீதிகள், சுற்றுச்சூழல் சீரழிவுகள் ஏற்படும்போது அதிகார வர்க்கங்களுக்கு எதிராக தன் 93-வது வயதிலும் அவரால் போர்க்கொடி தூக்க முடிகிறது. போராட்ட களத்திற்கு முதல் ஆளாக வருகிறார். போராளிகள் மீது அரசு காவல் துறையின் மூலம் அடக்குமுறையை ஏவும்போது, எந்தவித தயக்கமும் இன்றி சிறைக்கு செல்கிறார். அரசியலில் ‘நல்லக்கண்ணு’வாக திகழும் நல்லக்கண்ணுக்கு இன்று 93-வது பிறந்தநாள்.

Advertisment

தன்னுடைய இளம் வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டு மக்களுக்காக பணியாற்ற துவங்கினார். சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் கம்யூனிஸ்டுகள் மீது இந்திய அரசு கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்தது. பலர் சிறை சென்றனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பலரும் மறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர். அத்தகைய காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டபோது, நெல்லை சதி வழக்கில் கைதாகி, ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணுவின் 80வது பிறந்தநாளுக்கென கட்சியில் வசூலித்து கொடுத்த ஒரு கோடி ரூபாயையும் கட்சி நிதிக்கே கொடுத்துவிட்டார்.

நல்லக்கண்ணுவின் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”அய்யா நல்லகண்ணு அவர்களின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். தமிழ்நாட்டிலும், இந்திய திருநாட்டிலும் சமூகநீதியை நிலைநாட்டவும், மதச்சார்பற்ற ஆட்சி அமையவும் அய்யா நல்லகண்ணு அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவர் நீண்டகாலம் உடல்நலத்தோடு வாழ வேண்டும். அவருடைய லட்சியம் நிறைவேற நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டுமென அவருடைய பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை நான் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.”, என கூறினார்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment