Advertisment

இரட்டையர்களுக்கு ஒரே கல்லூரி: அண்ணா பல்கலை.,கலந்தாய்வில் சுவாரஸ்யம்

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் இரட்டையர்களுக்கு ஒரே கல்லூரி மற்றும் துறை கிடைத்துள்ளதால் அவர்களது குடும்பத்தினர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anna university engineering online counselling

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் இரட்டையர்களுக்கு ஒரே கல்லூரி மற்றும் துறை கிடைத்துள்ளதால் அவர்களது குடும்பத்தினர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்கைக்கான கலந்தாய்வு கடந்த 17-ம் தேதி தொடங்கியது.

முதல் இரண்டு நாட்களான, ஜூலை 17 மற்றும் 18-ம் தேதிகளில் தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. ஜூலை 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெற்று முடிந்து, விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. இந்த கலந்தாய்வுகளில் இதுவரை சுமார் 2000 இடங்கள் நிரம்பியுள்ளன.

இதனையடுத்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி (நேற்று) தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வழக்கமாக, கலந்தாய்வின் போது பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் அரங்கேறும். அதில் ஒன்றாக, அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகக் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை இரட்டையர்களான மாணவர்கள் ஹரி விஷ்ணு, ஹரி விக்னேஷ் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

ஹரி விஷ்ணு மற்றும் ஹரி விக்னேஷ் ஆகியோர் இரட்டை சகோதரர்கள். இவர்களது தந்தை திருப்பூரில் சொந்தமாக ஆஃப்செட் பிரிண்டிங் கடை நடத்தி வருகிறார். பத்தாவது வரை ஒரே பள்ளியில் ஆனால், வேறு வேறு வகுப்புகளில் பயின்று வந்த இவர்கள், பத்தாவது பொதுத் தேர்வில் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பின்னர், அந்த பள்ளியில் இடம் கிடைக்காததால், விகாஸ் வித்யாலயா பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்துள்ளனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விஷ்ணு, 1191 மதிப்பெண் பெற்று 200 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அதேபோல், விக்னேஷ், 1186 மதிப்பெண் பெற்று 199.25 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகக் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை விஷ்ணுவுக்கு கிடைத்துள்ளது. இருவரும் ஒரே மதிப்பெண்கள் எடுப்பார் என எதிர்பார்த்திருந்த பெற்றோர், விக்னேஷுக்கும் அதே கல்லூரியில் அதே துறை கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் காத்திருந்துள்ளனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக விக்னேஷுக்கும் அதே கல்லூரியில், அதே துறை கிடைத்துள்ளது. இரட்டையர்களுக்கு ஒரே கல்லூரி, ஒரே துறை கிடைத்துள்ளது அவர்களது குடும்பத்தாரை மட்டுமல்ல அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Chennai Anna University Guindy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment