Advertisment

பண மதிப்பிழப்பு சோகம் : லட்சுமி சேர்த்த ரூ 31,500 ஈமக் கிரியைக்கும் உதவவில்லை!

ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்த மூதாட்டியின் கடைசி ஆசை நிறைவேறாமல்போன வேதனை விழுப்புரம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
demonetisation, last rites,

கணவனும் சிறு வயதில் இறந்துவிட ஆதரவுக்கு பிள்ளைகளும் இல்லாத மூதாட்டி, தன் இறப்பு சடங்குகள் யாருடைய தயவில்லாமலும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, அரும்பாடுபட்டு தள்ளாத வயதிலும் கூலி வேலை செய்து ரூ.31,500 சேர்த்து வைத்திருக்கிறார். ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அவருடைய கடைசி ஆசை நிறைவேறாமல்போன வேதனை விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 74). சிறுவயதிலேயே கணவர் இறந்துவிட்டார். பிறந்த ஒரு ஆண் குழந்தையும் உடல் நலக்குறைவு காரணமாக சிறு வயதிலேயே இறந்துவிட்டது. இதனால், தன் சகோதரர் முத்துசாமியின் தயவில் லட்சுமி வாழ்ந்து வந்தார். ஆனால், கடந்த 2006-ஆம் ஆண்டு இறந்துவிட அவரது மகன் சரவணனின் ஆதரவில் வாழ்ந்து வந்தார் லட்சுமி.

ஆனால், சரவணனுக்கு மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருப்பதால் மூதாட்டி லட்சுமியை சரிவர கவனிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், தம் இறுதிச்சடங்கு யாருடையை தயவுமின்றி சொந்த செலவில் நடத்தப்பட வேண்டும் என்று எண்ணிய மூதாட்டி லட்சுமி, அருகிலேயே விளக்குமாறு தயாரிக்கும் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்திருக்கிறார். முதியோர் உதவித்தொகையும் பெற்று வந்துள்ளார். இதனிடையே, தன் இறுதிச்சடங்குக்கு பணம் சேர்த்து வைத்திருப்பது குறித்தும் வீட்டில் சொல்லி வந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதனால், அவரிடம் உள்ள பணத்தை மாற்ற வேண்டும் என வீட்டில் உள்ளவர்கள் கேட்டதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், மூதாட்டி லட்சுமி கடந்த 17-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக லட்சுமி இறந்துபோனார். இறுதிச்சடங்கின்போது, அவருடைய சுருக்குப்பையை கண்டெடுத்த உறவினர்கள், அதில் செல்லாத 500 ரூபாய் நோட்டுகள் மொத்தம் ரூ.31,500 மதிப்பளவில் இருந்திருக்கிறது. ஆனால், அதை இப்போது பயன்படுத்த முடியுமா? அதை அப்படியே எடுத்து வைத்துவிட்டு இறுதிச்சடங்கை செய்து முடித்திருக்கின்றனர் உறவினர்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எத்தனையோ சிறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர். திருமணங்கள் நின்றன. இப்போது, சுயமாக தன் இறுதி மூச்சு வரை மூதாட்டி சம்பாதித்த பணமும் செல்லாக்காசாகி அவருடைய கடைசி ஆசையும் நிறைவேறாமல் போயிருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment