Advertisment

மக்களவை தேர்தல்: பா.ஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உடன் இணைந்து போட்டியிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

author-image
WebDesk
New Update
GK Vasan, Sivaji Statute, Actor Sivaji, Chennai Marina, TMC, GK Vasan,

2024 மக்களவை தேர்தலில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைந்து சந்திக்க வாய்ப்புகள் உள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gk Vasan | Tn Bjp | 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் அறிவிப்புகள் இன்னும் சில நாள்களில் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகின்றன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன.

இதற்கிடையில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் இன்று ஜி.கே. வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடததினார்.

அப்போது, பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tn Bjp Gk Vasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment