Advertisment

துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை: டிடிவி தினகரன் சூளுரை

துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை. துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!! என டிடிவி தினரகன் சூளுரைத்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
TTV Dhinakaran, ADMK Merger

துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை. துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!! என டிடிவி தினரகன் சூளுரைத்துள்ளார்.

Advertisment

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக பிளவு கண்டது. ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்ட பன்னீர்செல்வம், அதிமுக-வை இரண்டாக உடைத்து தர்மயுத்தத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

அதிமுக கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் தர்மயுத்தத்தை தொடங்கிய சில நாட்களில் சசிகலா சிறை சென்றார்.

ஜெயலலிதா காலமானதால் காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு இடைதேர்தல் நடத்தப்பட்டது. சசிகலாவால் அதிமுக துணைப் பொதுச் செயலாளராக்கப்பட்ட டிடிவி தினகரன் களமிறங்கினார். பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்தானதுடன், அதிமுக சின்னம் மற்றும் கட்சி முடக்கப்பட்டது. அதிமுக அம்மா அணி என்ற பெயரில் டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் சசிகலா அணியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரில் பன்னீர்செல்வம் அணியும் தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் செயல்பட்டு வந்தனர். இருதரப்பினரும் கட்சி மற்றும் சின்னத்துக்கு தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரினர்.

அந்த சூழலில் டிடிவி தினகரன் இரட்டை இல்லை சின்னதாய் மீட்க லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் சிறை சென்றார். அப்போது, அதிமுக அம்மா அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தினகரன் சிறையில் இருந்து வந்ததும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். ஆனார், எடப்பாடி பழனிசாமி அணி அவரை ஓரங்கட்டியது. தொடர்ந்து, பழனிசாமி அணி -பன்னீர்செல்வத்தின் அணியை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முயற்சிகளும் திரைமறைவிலேயே நடைபெற்றது.

இந்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தினகரன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் இறுதி கட்டத்தை எட்டியது. சுமூக பேச்சுவார்த்தைக்கு பின், நேற்றைய தினம் இரு அணிகளும் இனைந்தது. பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். மாஃபா பாண்டியராஜன் அமைச்சரானார்.

நேற்றைய அணிகள் இணைப்பின் போது, கூடிய விரைவில் சசிகலாவும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பினர், தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் மற்றும் நிர்வாகிகளுடன் தினகரன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை. துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!! என டிடிவி தினரகன் சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், "இன்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். 1989-ஆம் ஆண்டில் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, அம்மா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள்.

இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம். அம்மா அவர்களின் மறைவுக்கு பின் திரு பன்னீர்செல்வத்தையும் பின் திரு பழனிச்சாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள். இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவிற்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள். இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்? நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை!துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!!" என பதிவிட்டுள்ளார்.

மேலும், "காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளதால், மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறேன். வருகிற 23-ம் தேதி (நாளை) செய்தியாளர்களை சந்திக்கிறேன்" எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Ops Eps O Panneerselvam Ttv Dhinakaran Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment