Advertisment

பேருந்து கட்டணம் உயர்வு தொடர்பான விபரங்களை அனைத்து பேருந்துகளிலும் விளம்பரபடுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.

விலை உயர்வும் கட்டண உயர்வும் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அரசின் கொள்கை முடிவுகளில் எந்த அளவிற்கு தலையிட முடியுமோ அந்த அளவிற்கு தான் தலையிட முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019: Chennai High Court

Election 2019: Chennai High Court

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை வசூலிக்க தடை வதிக்க கோரி வழக்கறிஞர் சித்திரவேலு உள்ளிட்டோர் பொது நல வழக்கு தாக்கல் செய்தனர். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளின் கட்டணங்களை கடந்த வெள்ளிக்கிழமை இரவு தமிழக அரசு உயர்த்த அறிவுப்பு வெளியிட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட கட்டணங்கள் அடுத்த நாள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அதன்படி குறைந்தபட்ச கட்டணத்தை 3 ரூபாய்யில் இருந்து 5 ரூபாயாக நிர்ணயம் செய்தது. பேருந்து கட்டணத்தை 67 விழுக்காட்டு உயர்த்தியுள்ளது.

Advertisment

இது பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இரவோடு இரவாக எந்தவித அறிவுப்பும் இல்லாமல் எந்த கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக அரசு பொதுமக்களிடம் எந்த கருத்துக்களை கேட்கவில்லை. இந்த கட்டண உயர்வு தொடர்பாக அரசிதழில் வெளியிடவில்லை. எனவே இந்த கட்டண உயர்வுக்கு தடை வதிக்க வேண்டும் கூடுதல் பேருந்து கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் எப்படி நடத்த முடியும். எப்படி இதனை பொது நல வழக்காக தொடர முடியும் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், அரசு அறிவிப்பாணை வெளியிடாமலேயே கட்டணம் உயர்த்தபட்டுள்ளது. அதனால் பொது நல வழக்கு போட்டுள்ளோம். கட்டண உயர்வை இரவோடு இரவாக அறிவித்திவிட்டு அதனை அடுத்த நாள் அதிகாலையில் இருந்து அரசு வசூலிக்கின்றனர்.

நீதிபதிகள் அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும். அரசின் கட்டண விகிதங்களை நீதிமன்றங்கள் நிர்ணயம் செய்ய முடியாது என தெரிவித்தனர். பல பொருட்களின் விலை உயர்கிறது. அதில் ஒவ்பொன்றிலும் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும் என கேள்வி எழுப்பினார்.

மனுதார் தரப்பு வழக்கறிஞர், புதிய கட்டண உயர்வு என்றிலிருப்து உயர்த்தப்படும் என அவகாசம் கூட அரசு கொடுக்கவில்லை. மாநகர பேருந்துகளில் 3 ரூபாய் முதல் 19 ரூபாய் உயர்த்த பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளில் 67 சதவிகிதத்துக்கு மேல் கட்டண உயர்வை அரசு அறிவித்து பல இடங்களில் 100 சதவீதம் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இது ஏழை சாமானிய மக்களை மிகவும் பாதிக்கபட்டுள்ளது.

நீதிபதிகள், அரசின் கட்டண உயர்வுகள் அல்லது கட்டண விகிதங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளில் அறிவு வழங்கியுள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக தமிழக அரசின் பதில் என்ன என்று தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண், கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவை பல மடங்குகள் உயர்ந்துவிட்டாது. ஆதனால் கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை என்றார். புதிய கட்டண உயர்வு தொடர்பாக கடந்த 19.01.2018 அரசிதழில் வெளியிடபட்டுள்ளது. அது தொடர்பான அரசிதழ் நகல் தாக்கல் செய்தார்.

மனுதார், சாதாரண, எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏசி, இடைநில்லா பேருந்து என பல வகைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டாலும், மாற்றி மாற்றி வசூலிக்கப்படுகிறது. எனவே அந்தந்த பேருந்துக்கான அட்டவணையை ஒட்ட வேண்டும்.

நீதிபதிகள், பேருந்து கட்டண உயர்வு தொடர்பான அட்டவணையை ஏன் பேருந்துகளில் ஒட்டக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், விலை உயர்வும் கட்டண உயர்வும் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. அரசின் கொள்கை முடிவுகளில் எந்த அளவிற்கு தலையிட முடியுமோ அந்த அளவிற்கு தான் தலையிட முடியும். மனுக்கள் விசாரணைக்கு ஏற்க தகுந்ததல்ல. அனைத்து அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளில் கட்டண அட்டவணையை உடனடியாக ஒட்ட வேண்டும். கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்கிறது என்றாலும், இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. வல்லுநர்களின் அறிவுரை, செலவுகள், போக்குவரத்து கழங்கள் செலுத்த வேண்டிய நிலுவைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டே கட்டணம் உயர்வு. சலுகை அல்லது மானியம் வழங்குவது என்பது அரசின் முடிவை பொறுத்தது. எனவே மனுக்கள் விசாரணைக்கு ஏற்க தகுந்ததல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment