Advertisment

நாளை கன மழைக்கு வாய்ப்பு... வடகிழக்கு பருவமழை சீஸன் தொடங்கியது

மழை என்கிற வான்மகள் தமிழகத்தை குளிரவைக்கும் சீஸன் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த சீஸன்தான் அடுத்த ஓராண்டுக்கு தமிழகத்தை செழிப்பாக வைத்திருக்க வேண்டும்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu, north east monsoon begins, வடகிழக்கு பருவ மழை தொடக்கம், தமிழ்நாடு அரசு, tamilnadu government, north east monsoon, chennai regional meteorological centre

மழை என்கிற வான்மகள் தமிழகத்தை குளிரவைக்கும் சீஸன் ஆரம்பிக்க இருக்கிறது. இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை சீஸன்தான் அடுத்த ஓராண்டுக்கு தமிழகத்தை செழிப்பாக வைத்திருக்க வேண்டும்.

Advertisment

மழை, இரு பருவங்களாக பொழிகிறது. ஒன்று, தென்மேற்கு பருவமழை! இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகம் இருக்கும். இந்த காலகட்டத்தில் தமிழகம் மழை மறைவு பிரதேசமாக இருக்கும். எனவே குறைந்த அளவிலான மழையையே பெறும்.

தென்மேற்கு பருவமழை காலம் தமிழகத்தில் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கி இருக்கிறது. அதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் (இன்று அல்லது நாளை) தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 27-ந் தேதி (நாளை) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல் 28-ந் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் 5 செ.மீ., சேரன்மகாதேவியில் 4 செ.மீ., அரண்மனைபுதூரில் 3 செ.மீ., சாத்தூர், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, உத்திரமேரூரில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தைவிட கூடுதலாகவே பெய்தது. குறிப்பாக சென்னையை மிரட்டிய குடிநீர் பஞ்சம், மழை காரணமாகவே காணாமல் போனது. வடகிழக்கு பருவமழை ஆபத்து இல்லாத வகையிலும், மக்களுக்கு பயன்பெறும் வகையிலும் அமையவேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு!

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment