Advertisment

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்படத் தொடங்கியது!

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்படத் தொடங்கியது!

பராமரிப்பு காரணமாக கடந்த மூன்று தினங்களாக முடங்கியிருந்த தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tn.gov.in தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது.

Advertisment

தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள், அரசு உத்தரவுகள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பற்றிய விவரங்கள், செய்திக்குறிப்புகள், டெண்டர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஆனால் கடந்த மூன்று நாட்களாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்படாமல் முடங்கி இருந்தது. பராமரிப்பு பணி காரணமாக முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக செய்திகள் பரவியது. அரசு இணையதளத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அது சரி செய்யப்பட்டு விடும் என்றும் அரசு அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில், பராமரிப்பு காரணமாக கடந்த மூன்று தினங்களாக முடங்கியிருந்த தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tn.gov.in தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment