Advertisment

Tamil News Updates: நாடாளுமன்ற தாக்குதல்- விசாரணை நடத்த குழுவை அமைத்தது மத்திய அரசு

Tamil News, Chennai floods, Sabarimala, India vs South Africa Highlights, Chennai Tamilnadu Rains Today – 13 December 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Parliamant Smoke

Tamil news today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Dec 14, 2023 07:03 IST
    விசாரணை நடத்த குழுவை அமைத்தது மத்திய அரசு

    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்தது மத்திய அரசு.

    நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலுக்கான காரணங்களை குழு ஆராயும். பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு குழு பரிந்துரைக்கும்- மத்திய உள்துறை அமைச்சகம்



  • Dec 13, 2023 21:50 IST
    4 பேர் கைது; ஒருவருக்கு வலை; தீவிர விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவு

    மக்களவையில் வண்ண புகை வீச்சு நடத்தப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்



  • Dec 13, 2023 21:00 IST
    மக்களவையில் வண்ண புகை: எதிர்க்கட்சிகள் கவலை


    அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக் கவலையை எழுப்பினார்கள்.
    இன்று நாடாளுமன்றத்தில் வண்ண புகை வீசப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைதாகி உள்ளனர். இருவரை போலீசார தேடிவருகின்றனர்.



  • Dec 13, 2023 20:41 IST
    மக்களவையில் திட்டமிட்டு நடந்த தாக்குதல்


    “பாராளுமன்ற மக்களவை பாதுகாப்பு மீறல் நன்கு திட்டமிடப்பட்டது; குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் ஒருவரையொருவர் 4 ஆண்டுகளாக அறிந்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளனர்” என டெல்லி போலீசார் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.



  • Dec 13, 2023 20:28 IST
    மக்களவை பாதுகாப்பு குறைபாடு: காங்கிரஸ் போராட்டம்


    மைசூரில் உள்ள பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா அலுவலகம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
    முன்னதாக மக்களவையில் வண்ணப் பொடிகள் வீசப்பட்டன. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா அலுவலக அடையாள அட்டையுடன் வந்ததாக கூறப்படுகிறது.



  • Dec 13, 2023 20:24 IST
    மக்களவை பாதுகாப்பு குறைபாடு: 4 பேர் கைது

     

    மக்களவையில் வண்ணப் பொடி வீசப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     



  • Dec 13, 2023 19:18 IST
    மக்களவை பாதுகாப்பு குறைபாடு: குர்கானில் போலீஸ் விசாரணை


    பாராளுமன்ற பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தங்கியிருந்ததாகக் கூறப்படும் குருகிராமின் செக்டார் 7ல் உள்ள ஹவுசிங் போர்டு காலனியில் போலீசார் விசாரணை நடத்தினர்.
    பாராளுமன்றத்திற்கு வெளியே பிடிபட்ட அமோல் ஷிண்டே மற்றும் நீலம் மற்றும் மக்களவை அறைக்குள் வைக்கப்பட்ட சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் போலீஸ் காவலில் உள்ளனர். மேலும், லலித் மற்றும் விக்ரம் ஆகிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.



  • Dec 13, 2023 19:00 IST
    ராஜ்ய சபாவில் கார்கே - கோயல் கடும் வாதம்

     

    ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரத்தை மீண்டும் சபையில் எழுப்பினார்.  “நாங்கள் அவையை தயவுசெய்து ஒத்திவைக்க கேட்டுக்கொள்கிறோம். உள்துறை அமைச்சர் வந்து கூடுதல் விவரங்களைத் தெரிவிக்கட்டும்” என்று கார்கே கூறினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய ராஜ்யசபாவின் அவைத்தலைவர் பியூஷ் கோயல்,  “ராஜ்யசபாவை முதியோர்கள் சபை என்று நான் நினைக்கிறேன். இந்த நாட்டின் பலம் இதற்கெல்லாம் மேலானது என்ற செய்தியை நாம் வழங்க வேண்டும். சபை நடவடிக்கைகள் தொடர வேண்டும்... என நினைக்கிறேன். காங்கிரஸ் இதை அரசியலாக்குகிறது, இது நாட்டிற்கு நல்ல செய்தி அல்ல.” என்று கூறினார்.



  • Dec 13, 2023 18:57 IST
    மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மஞ்சள் புகை குப்பிகளை வீசிய 2 பேர் யார்?

    மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மஞ்சள் புகை குப்பிகளை வீசிய இருவர் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மைசூரு மக்களவை உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் விருந்தினராக சாகர் சர்மா பார்வையாளர் மாடத்திற்கு வந்திருந்தார்.



  • Dec 13, 2023 18:54 IST
    ‘நிச்சயமாக ஓட்டை இருக்கிறது’ - பா.ஜ.க உறுப்பினர்

    “நிச்சயமாக, ஓட்டை உள்ளது” என்று மக்களவை பா.ஜ.க உறுப்பினர் ராஜேந்திர அகர்வால் கூறினார்.  “முதலில், ஒரு நபர் விழுந்திருக்கலாம் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், இரண்டாவது நபர் கீழே வரத் தொடங்கியதும், நாங்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருந்தோம்” என்று அகர்வால் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • Dec 13, 2023 18:51 IST
    விரைவான விசாரணை, கடுமையான நடவடிக்கை தேவை - கெஜ்ரிவால் கோரிக்கை

    நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்த பாதுகாப்பு மீறல் "நமது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது" என்று கூறிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவைக்குள் நுழைந்து மஞ்சள் நிற புகையை வெளியிடும் டப்பாவைத் வீசிய 2 பேர் மீது கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.

    “2001 தாக்குதல் ஆண்டு நிறைவையொட்டி, நாடாளுமன்றத்தில் இன்று நடந்த அத்துமீறல், நமது ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செயலாகும். நமது ஜனநாயகக் கோவிலின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது” என்று கெஜ்ரிவால் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுளார். 



  • Dec 13, 2023 18:49 IST
    உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்கும் அளவுக்கு தீவிரமான விவகாரம் இது - சசி தரூர்

    நாடாளுமன்றத்தில் இன்று நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து தனது கவலையை தெரிவித்த திருவனந்தபுரம் எம்.பி சசி தரூ, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் தீவிரமானது என்று தான் நம்புவதாகக் கூறினார்.



  • Dec 13, 2023 18:46 IST
    நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 2 பேர் யார்?

    நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று மஞ்சள் புகை குப்பிகளை வீசி போராட்டம் நடத்திய 2 பேர்களில் ஒருவர் ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) என்ற பெண், மகாராஷ்டிராவின் லத்தூர் பகுதியை சேர்ந்த அமோல் ஷிண்டே (25) என அடையாளம் காணப்பட்டனர்.



  • Dec 13, 2023 18:42 IST
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல்: அமித்ஷாவிடம் அறிக்கை கேட்கும் எதிர்க்கட்சிகள்

    நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இன்று மதியம் 2 பேர் பொது மக்களவைக்குள் குதித்து மஞ்சள் புகையை வெளியேற்றும் டப்பாவை வீசினர். இதையடுத்து, லோக்சபாவில் பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்த அத்துமீறல் சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் பார்வையாளர்கள் நுழைவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.



  • Dec 13, 2023 18:39 IST
    நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய பெண் நீலம்; அவர் டெல்லி சென்றது எனக்கு தெரியாது - சகோதரர் தகவல்

    நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து பிடிபட்டவர்களில் ஒருவர் நீலம்,  “அவர் டெல்லி சென்றது கூட எங்களுக்குத் தெரியாது. அவர் ஹிசாரில் இருந்தார் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும். படிப்பு... நேற்றுமுன்தினம் எங்களைச் சந்தித்துவிட்டு நேற்று திரும்பியிருந்தாள்.பி.ஏ.,எம்.ஏ.பி.எட்., எம்.எட்., சி.டி.இ.டி. எம்.பில். நெட் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.வேலையில்லாத் திண்டாட்டத்தை பலமுறை எடுத்துரைத்துள்ளார். விவசாயிகளின் போராட்டங்களிலும் பங்கேற்றார்...” என்று தெரிவித்தார்.



  • Dec 13, 2023 18:35 IST
    மக்களவையில் அத்துமீறியவர்களை முறியடித்த உறுப்பினர்கள்: 2001 தாக்குதலை நினைவுகூர்ந்த எம்.பி.க்கள்

    2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டபோதும், இன்று புதன்கிழமை இருவர் கலர் புகை குப்பி டப்பாக்களைக் கொண்டு வந்ததால் பெரிய பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏற்பட்டபோதும் அவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு சம்பவங்களையும் கூறுகின்றனர். இது மிகவும் வித்தியாசமாக இருந்தன.

    அவர்களில் பி.ஜே.டி கட்டாக் எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் இருந்தார். புதன்கிழமை, ஜீரோ ஹவரின் போது அவர் பேசி முடித்தார், பார்வையாளர்கள் கேலரியில் இருந்து எம்.பி பெஞ்சுகள் மீது ஒருவர் குதித்ததால் சபையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

    2001-ல் நடந்தது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று மஹ்தாப் கூறினார். "நாடாளுமன்ற வளாகத்தின் வாயில்களுக்குள் பலத்த ஆயுதம் ஏந்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு மற்றும் வார்டு ஊழியர்கள் கட்டிடத்தைப் பாதுகாத்து வீரமரணம் அடைந்தனர், அவர்கள் உள்ளே நுழைந்து இரத்தக்களரியை ஏற்படுத்துவதற்குள் அவர்களை சுட்டுக் கொல்ல முடிந்தது ... அவைக்குள் துப்பாக்கிச் சூடுச் சத்தம் கேட்டது” என்று மஹ்தாப் நினைவு கூர்ந்தார். 



  • Dec 13, 2023 18:26 IST
    நாடாளுமன்றத்தில் அத்து மீறல்: 4 பேர் கைது; ஒருவர் கண்காணிப்பு - விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவு

     

    நாடாளுமன்ற வளாகத்தில் பெரிய பாதுகாப்பு மீறலில், இரண்டு பேர் மதியம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அறைக்குள் குதித்து மஞ்சள் புகையை வெளியேற்றும் டப்பாக்களை திறந்து வீசினர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே மஞ்சள் புகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவர் -- ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துமீறலைத் தொடர்ந்து, வளாகத்திற்குள் பார்வையாளர்கள் நுழைவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விளக்கம் கேட்டு அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தன.



  • Dec 13, 2023 18:19 IST
    பாதுகாப்பு குளறுபடியால் நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - கனிமொழி கண்டனம்

    தி.மு.க எம்.பி கனிமொழி: “பாதுகாப்பு குளறுபடியால் நாடாளுமன்றத்தில் அத்துமீறல் நடந்துள்ளது; பிரதமர் உள்ளிட்டோர் இருக்கக் கூடிய நாடாளுமன்றத்தில் அத்துமீறல் நடந்துள்ளது; நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நிச்சயமாக மத்ஹ்டிய அரசு பதில் சொல்ல வேண்டும்; பார்வையாளர் மாடத்தில் இருந்து எளிதில் அவைக்குள் நுழையும் வகையில் கட்டட வடிவமைப்பு உள்ளது” என்று கூறினார்.



  • Dec 13, 2023 18:11 IST
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனம் ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனம் ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு; மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறங்காவலர் நியமனத்தில எந்தவித விதிமுறை மீறலும் இல்லை. அறங்காவலர் குழுவில் 3 பெண்களை இடம்பெற செய்தது நீதிமன்றத்திற்கு மிகவும் திருப்தி அளிக்கிறது - நீதிபதிகள் கருத்து



  • Dec 13, 2023 18:11 IST
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனம் ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனம் ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு; மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறங்காவலர் நியமனத்தில எந்தவித விதிமுறை மீறலும் இல்லை. அறங்காவலர் குழுவில் 3 பெண்களை இடம்பெற செய்தது நீதிமன்றத்திற்கு மிகவும் திருப்தி அளிக்கிறது - நீதிபதிகள் கருத்து



  • Dec 13, 2023 17:18 IST
    நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி: ஸ்டாலின் கண்டனம்

    நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், புகை குண்டுகள் வீசிய சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக கோவிலான நாடாளுமன்றத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் நிகழ்ந்துள்ளது. இதுவரையில் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி நடந்துள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Dec 13, 2023 16:54 IST
    புகை குண்டு வீசியவர்களை தாக்கிய எம்.பி.க்கள்: வெளியான வீடியோ!

     

    நாடாளுமன்றத்திற்குள் பார்வையாளராக வந்து கலர் புகை குண்டு வீசியவர்களை  எம்.பி.க்கள் தாக்கியுள்ளனர். கலர் புகை குண்டு வீசியவர்களை நாடாளுமன்றத்திற்குள் எம்.பி-க்கள் சூழ்ந்து கொண்டு தாக்கும் வீடியோ வெளியானது. 



  • Dec 13, 2023 16:53 IST
    'ஆளுநரை சந்திக்க முதல்வர் தயார்' - தமிழ்நாடு அரசு தகவல்!

     

    ஆளுநரை சந்தித்து பேச முதல்வரும் தயார் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வருவதை முன்னிட்டு முதல்வருக்கு ஆளுநர் நேற்று தான் அழைப்பு விடுத்த நிலையில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. 



  • Dec 13, 2023 16:29 IST
     நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் - அடுத்தடுத்து வெளியான பரபரப்பு தகவல்கள்!

     

    நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் எவ்வித ஆவணமும் இன்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    நாடாளுமன்றத்துக்கு வெளியே பிடிபட்ட இருவரும் செல்போன், கைப்பை என எதையும் எடுத்து வரவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    நாடாளுமன்றத்துக்குள் நடந்த அத்துமீறல் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்படுள்ளது. அடையாள அட்டை உட்பட எந்த ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்துக்குள் இருவரும் நுழைந்தது எப்படி என போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

     



  • Dec 13, 2023 16:08 IST
    ரூ.6000 நிவாரண தொகை: அரசாணை வெளியீடு

     

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டத்திற்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Dec 13, 2023 15:39 IST
    காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்!

     

    "இந்திய ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் மக்களவையில் அத்துமீறி நுழைந்து, கலர் பாம் வீசிய செயல் மிகுந்த மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்சம்பவத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது" என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். 



  • Dec 13, 2023 15:38 IST
    டி.டி.வி. தினகரன் கருத்து 

     

    “நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மக்கள் பிரதிநிதிகள் மீது புகைகள் கக்கும் கருவியை வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்நாளில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று நடைபெற்றிருக்கும் பாதுகாப்பு மீறல் சம்பவம் மக்கள் பிரதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது” - என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 



  • Dec 13, 2023 15:37 IST
     நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறல் - இதுவரை நடந்தது என்ன?

     

    மக்களவையில் உள்ளே நுழைந்த இருவர் மற்றும் வெளியே இருவர் என 4 பேர் கைதாகியுள்ளனர். மக்களவையில் சி.ஆர்.பி.எப். இயக்குநர் உள்ளிட்ட பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். பார்வையாளர் பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு விதிமீறல் குறித்து விவாதிக்க மறுத்ததால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். 



  • Dec 13, 2023 15:36 IST
    நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீச்சு: இருவரின் அடையாளம் தெரிந்தது

     

    மக்களவைக்குள் புகை குண்டு வீசிய இருவரின் அடையாளம் தெரிந்தது. மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர் ஷர்மா என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா வழங்கிய அனுமதி சீட்டில் இருவரும் உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Dec 13, 2023 15:35 IST
    நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீச்சு!

     

    புகை குண்டு வீசியவர்கள் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்திருந்தாகவும், புகை குண்டு வீசிய போது மஞ்சள் நிற புகை வெளியேறி கண் எரிச்செல் ஏற்பட்டது எம்.பி ஆதிரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். 



  • Dec 13, 2023 15:34 IST
    நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீச்சு - தடவியல் நிபுணர்கள் ஆய்வு!

     

    நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்த போதே புகை குண்டு வீசப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். 

     



  • Dec 13, 2023 15:16 IST
    'சந்தி சிரிக்கும் பாதுகாப்பு!' - ஆளூர் ஷா நவாஸ், விசிக எம்.எல்.ஏ காட்டம்!

     

    "ராஜ்பவனுக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசிய வினோத்தை அங்கேயே போலீஸ் மடக்கிப்பிடித்த பிறகும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆளுநரும் பாஜகவினரும் ஒப்பாரி வைத்தனர். இன்று நாடாளுமன்றம் உள்ளேயே தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு என்ன பதில்? யார் பொறுப்பு? சந்தி சிரிக்கும் பாதுகாப்பு!" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Dec 13, 2023 15:14 IST
    மாலை 4 மணி வரை அவை ஒத்திவைப்பு!

     

    நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை அடுத்து, மாலை 4 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



  • Dec 13, 2023 15:11 IST
    பா.ஜ.க எம்.பி  நுழைவு ரசீதை பயன்படுத்திய இருவர்!

     

    பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தி இருவர் மக்களவைக்குள் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Dec 13, 2023 14:45 IST
    நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறல் : இ.பி.எஸ் கண்டனம்


    மக்களவையில் புகை குண்டு வீச்சு சம்பவத்துக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை களைந்து, உடனே வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 



  • Dec 13, 2023 14:16 IST
    நீர்நிலைகளில் எண்ணெய் கழிவு படரவில்லை : தலைமை செயலாளர்

    திருவள்ளூர் நீர்நிலைகளில் எண்ணெய் கழிவு படரவில்லை. கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் எண்ணெய் படலம் குறித்து கடந்த 7ம் தேதி ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.



  • Dec 13, 2023 14:12 IST
    16 மற்றும் 17ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளர்.



  • Dec 13, 2023 14:07 IST
    நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீச்சு

    2001ஆம் ஆண்டு இதே நாள் நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்த நிலையில், இன்று இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது



  • Dec 13, 2023 13:37 IST
    நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைய முயன்ற இருவர் கைது

    நாடாளுமன்ற தாக்குதல் தினமான இன்று தடை செய்யப்பட்ட பொருட்களுடன் நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் புகைகுண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Dec 13, 2023 13:19 IST
    மசோதாக்கள் ஒப்புதல்: ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

    நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு. முதல்வரை ஆளுநர் அழைத்து பேச வேண்டும் என முன்னதாக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 



  • Dec 13, 2023 12:59 IST
    9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் டிச.16,17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு



  • Dec 13, 2023 12:57 IST
    சிறைவாசிகளுக்கு வீடியோ கால் வசதி: அரசாணை வெளியீடு

    சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் உயர்த்தி வழங்குவதோடு காணொலி (வீடியோ கால்) தொலைபேசி வசதியினை புதியதாக ஏற்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை. 



  • Dec 13, 2023 12:46 IST
    ஒரு வாரத்தில் மத்திய குழு அறிக்கை

    மத்திய ஆய்வு குழுவில்  இடம் பெற்றுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜயகுமார் தகவல்.   மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை இன்னும் 1 வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். சென்னையில் 2-வது நாளாக மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் மத்திய குழு. 



  • Dec 13, 2023 12:18 IST
     முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் யாதவ்

    மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் யாதவ்

    போபாலில் உள்ள மோதிலால் நேரு மைதானத்தில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

    ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்பு



  • Dec 13, 2023 12:18 IST
     முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் யாதவ்

    மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் யாதவ்

    போபாலில் உள்ள மோதிலால் நேரு மைதானத்தில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

    ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்பு



  • Dec 13, 2023 12:17 IST
    கோடிக்கணக்கில் பணம் பெற்ற ஆர்.கே.சுரேஷ்?: விசாரணையில் புதிய தகவல்

    நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல்.

    தயாரிப்பாளர் ரூசோவிடம் இருந்து வங்கி கணக்கு மூலமாகவும், பணமாகவும் கோடிக்கணக்கில் பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்

    ஆர்.கே.சுரேஷ் ரூசோவிடம் இருந்து பெற்ற பணத்தை படத்திற்கும், சொந்த செலவுக்கும் செலவு செய்ததாக தகவல். ஆர்.கே.சுரேஷிடம் நடத்திய விசாரணை அறிக்கையை போலீசார் டிச.18ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்



  • Dec 13, 2023 11:52 IST
    75 படகுகள் மூலம் எண்ணெய் படலம் அகற்றும் பணி தீவிரம் 

    எண்ணூர் முகத்துவாரம் - 75 படகுகள் மூலம் எண்ணெய் படலம் அகற்றும் பணி தீவிரம் 

    எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 2-வது நாளாக தொடர்கிறது.  75 படகுகள் மூலம் எண்ணெய் படலம் அகற்றும் பணி தீவிரம். மீனவர்கள் உதவியுடன் சி.பி.சி.எல் நிறுவன ஊழியர்கள் கடல், ஆற்றில் கலந்த  எண்ணெய் படலத்தை அகற்றி வருகின்றனர். 



  • Dec 13, 2023 11:26 IST
    லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி சிறுமி பலி

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு. தந்தை கண் முன்னே, தலை நசுங்கி சிறுமி உயிரிழந்த சோகம். தந்தை மருத்துவமனையில் அனுமதி. லாரி ஓட்டுநர் தப்பியோட்டம். 



  • Dec 13, 2023 11:25 IST
    ஆருத்ரா ரூசோவிடம் பணம் பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம் 

    வொயிட் ரோஸ் என்ற திரைப்படத்திற்காக ஆருத்ரா ரூசோவிடம் பணம் இருந்து  பணம் பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் தகவல். ரூ.15 கோடி பணத்தை ஆர்.கே.சுரேஷ்-க்கு வழங்கியதாக புகார். பெருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜரான சுரேஷிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை 



  • Dec 13, 2023 10:55 IST
    மத்தியக் குழுவினர் 2வது நாளாக ஆய்வு

    சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர் 2ம் நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    தற்போது , கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் , வில்லிவாக்கம், அம்பத்தூர் எஸ்டேட், பாடி மின் துணை நிலையம், கொரட்டூர் கழிவுநீர் உந்து நிலையம், ஆவின் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment