Advertisment

362 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல்

362 ஆயுள் தண்டனை சிறை கைதிகளை விடுதலை செய்ய, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 165 பேரின் விடுதலை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
savagg

362 ஆயுள் தண்டனை  சிறை கைதிகளை விடுதலை செய்ய, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 165 பேரின் விடுதலை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

Advertisment

1998-ல் கோவை குண்டு வெடிப்பில் சமந்தப்பட்ட நபர்கள் உள்பட 49 பேரின் விடுதலை கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது. நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி வாதாடினார். அப்போது ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.

ஆளுநர் மாளிகைக்கு இதுவரை கைதிகள் விடுதலை தொடர்பாக 580 பரிந்துரைகள் வந்துள்ளது. இதில் 53 நிலுவையில் உள்ளதை தவிர்த்து, மற்ற 2 கோரிக்கைகளும் இந்த ஆண்டு ஜூன் 20,, தேதியும், மற்ற பரிந்துரைகள் ஆகஸ்ட்டு 4 , 9 தேதிகளில் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது என்றும். மற்ற 49 கோரிக்கைகளும் ஆகஸ்டு 24ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு கிடைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நிலுவையில் உள்ள எல்லா பரிந்துரைகளும் சமீபத்தில்தான் ஆளுநர் மாளிகைக்கு கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  கடந்த மாதம் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, அண்ணாதுரையின் 115 பிறந்த நாளை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய உள்ளதாக கூறினார். இதில் 566 நபர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து அதில் 335 பேர் விடுதலை செய்தது.

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு முதல்கட்டமாக 264 பேரை விடுதலை செய்ய பரிந்துரை செய்தது.

20 இஸ்லாமிய கைதிகள் உட்பட, 49 பேரை விடுதலை செய்யும் கோரிக்கையை ஆளுநர் மாளிகைக்கு ஆகஸ்ட்டு 24ம் தேதி அனுப்பி வைத்ததாக முதல்வர் கூறினார்.  அதே நாளில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 49 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடதக்கது.  

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment