Advertisment

வெளிநாடுகளில் தமிழ் வளர்மையங்கள், பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் : அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

வெளி நாடுகளில் தமிழ் வளர்மையங்கள், பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்’ என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் உறுதியளித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil

Tamil Nadu news today in tamil

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 4 –வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர், ’வெளி நாடுகளில் தமிழ் வளர்மையங்கள், பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்’ என உறுதியளித்தார்.

Advertisment

நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் 16.11.2017 முதல் 19.11.2017 வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் டர்பன் அரசர் ஸ்வெதிலினி, மொரிஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் தமிழ் அமைப்புகள், வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தமிழக அரசின் சார்பில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘வேர் பிடித்த இடத்திலிலெல்லாம் மணம் பரப்பும் தமிழ்ச் சமுதாயம், மணம் பரப்பிய இடத்திலெல்லாம் உரிமையுடன் அந்த நாட்டுக்கு பெருமைச் சேர்த்தது நம் தமிழ்ச் சமுதாயம் என்றால் அது மிகையல்ல. வாணிபம் என்பது தமிழர்கள் ரத்தத்தில் கலந்த ஒன்று.

திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற பொன்மொழிக்கிணங்க, பலநாடுகளுக்கும் சென்ற நமது முன்னோர்கள் வாணிபம், தொழில்களில் ஈடுப்பட்டனர். இன்று உலகில் உள்ள 155 நாடுகளில் 9.81 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழ் நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு முனைப்புடன் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் தொடங்க அனைவரையும் தமிழக அரசின் சார்பில் வரவேற்கிறேன். பிற நாடுகளில் வசிக்கும் மக்கள் என்ற வகைப்பாடுகளில் முதல் இடத்தில் சீன மக்களும், இரண்டாம் இடத்தில் இந்தியர்களும்

உள்ளோம். அயல் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 52 சதவீதம் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழர்களுக்காக தனியே ஒரு மூலதன அமைப்பு தொடங்கப்பட வேண்டும். அதற்கு இந்த மாநாடு தொடக்கமாக அமைய வேண்டும் என விரும்புகிறேன்.

உலக மொழிகளில் மதிப்பு மிக்க மொழிகளை யுனஸ்கோ வகைப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில், தமிழ்மொழி பதினாறாவது இடத்தில் உள்ளது. அயல் நாடுகளில் சில நாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழ் பேச இயலாத நிலையில் தான் உள்ளது. அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்கள் நமது மொழியைப் பேசும் போது, நம் மொழி இவ்வரிசையில் பத்து இடங்களுக்குள் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது. இந்திக்கு பிராச்சார சபா இருப்பது போல்

தமிழர்கள் பரவியுள்ள நாடுகளில் முதற்கட்டமாக 1 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் வாழும் 17 நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும் எனவும், இதற்கான முனைப்பு பணிகளில் தமிழ்நாடு அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. அதுபோலவே, தமிழர்களின் கலை பண்புகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்க் கலைகளை பயிற்றுவிக்கும் தமிழ் பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும். மேற்கத்திய இசை முறைக்கு கிரேடிங் முறை

இருப்பது போன்று தென்னக இசை முறைக்கும் கிரேடிங் முறை ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment