Advertisment

மெர்சல் விவகாரம்: முதன்முறையாக மனம் திறந்த ரஜினிகாந்த்!

இந்தச் சூழ்நிலையில், மெர்சல் படம் குறித்து பட்டும் படாமலும் சூப்பர்ஸ்டார் நேற்று இரவு ஒரு ட்வீட்டை தட்டியுள்ளார். அதில்....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth, Kaala, Court refused to ban

Rajinikanth, Kaala, Court refused to ban

தீபாவளியன்று வெளியான நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தின் சில காட்சிகளுக்கு, பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பும், ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் இருந்து பேராதரவும் கிடைத்துள்ளது. டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி போன்றவற்றை விஜய் தவறாக சித்தரித்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதோடுமட்டுமில்லாமல், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, "ஜோசப் விஜய்யின் மோடி மீதான வெறுப்பு அரசியலே மெர்சல்" என்றார்.

Advertisment

விஜய்யை, ஜோசப் விஜய் என அவர் குறிப்பிட்டதால் மேலும் இவ்விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால், இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத விஜய், "இப்படத்தை பெரும் வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி" என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார். இங்கு அனைவரும் என அவர் குறிப்பிட்டது பாஜகவினரையும் சேர்த்து தான் என்பது ரசிகர்களின் பார்வையாக உள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, "நான் மெர்சல் படத்தை நெட்டில் பார்த்தேன்" என ஹெச்.ராஜா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூற, ஒட்டுமொத்த திரையுலகமும் இதற்கு கண்டனம் தெரிவித்தது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், 'வெட்கமில்லையா உங்களுக்கு?' என்கிற ரீதியில் கண்டன அறிக்கை விட்டார். வேறு சில முக்கிய நடிகர்களும் தங்களது எதிர்ப்புகளை எழுப்பியதால் ஜெர்க்கான ஹெச்.ராஜா, "நான் என் மொபைலுக்கு வந்த படத்தின் சில காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். முழு படத்தை எல்லாம் பார்க்கவில்லை. நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. எனக்கு வந்த அந்த வீடியோக்களை நான் மற்றவர்களுக்கு ஃபார்வேர்ட் கூட செய்யவில்லை. எனது சாதனங்களை தேடி வரும் வீடியோக்களை நான் பார்க்க கூடாது என யாராலும் தடுக்க முடியாது" என்றார்.

இந்த நிலையில், மெர்சல் குறித்து தமிழக திரைத் துறையில் கமல்ஹாசன் வரை தங்களது கருத்துகளை தெரிவித்துவிட்டார். இவ்வளவு ஏன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பே, மெர்சல் படத்திற்கு ஆதரவு தருவது போல், நம்மாளுங்க பக்காவாக ஒரு ட்விட்டர் பக்கத்தை உருவாக்கி இணையதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

ஆனால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும், இதுவரை மவுனம் சாதித்து வந்தார். அவரின் மவுனத்தை பலரும் பாஜக ஆதரவு நிலைப்பாடு என வெளிப்படையாக கூறி வந்தனர். சிலர், மோடியின் திட்டங்களை எதிர்த்து விஜய் பேசியிருப்பதால், அதற்கு எப்படி ஆதரவு தருவது என ரஜினி தயங்குவதாகவும் விமர்சித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், பட்டும் படாமலும் சூப்பர்ஸ்டார் நேற்று இரவு ஒரு ட்வீட்டை தட்டியுள்ளார். அதில், "மெர்சல் படத்தில் முக்கியமான பிரச்சனைகள் குறித்து அலசப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு பாராட்டுகள்"என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் ரஜினி, 'முக்கியமான பிரச்சனைகள்' என்று குறிப்பிட்டிருப்பதால், நிச்சயம் படத்தில் வரும் மருத்துவ துறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் பிக்கல் பிடுங்கல்கள் குறித்தே அவர் தனது கருத்துகளை கூறியுள்ளார் என தெரிகிறது.

ஆக, மோடியையும் எதிர்க்காமல், மெர்சலுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார் நம்ம 'அரசியல் தெரியாத' சூப்பர்ஸ்டார்!.

H Raja Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment