Advertisment

சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழா LIVE UPDATE : தாயை வணங்குபவர்கள் உயர்ந்து இடத்துக்கு வருவார்கள் - ஓபிஎஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி அடையாறில் அமைக்கப்படுள்ள சிவாஜி மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
sivaji

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். சென்னை அடையாறில் நடைபெறு வரும் விழாவில் அமைச்சர்கள், ரஜினி, கமல் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள், திரையுலகினர் கலந்து கொண்டுள்ளனர். சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

சென்னை அடையாறில் அரசு சார்பில் சிவாஜி மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று காலை 10.30 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், மாஃபா. பாண்டியராஜன், எம்.எல்.ஏ. நடராஜ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தனர். அங்கு வந்த துணை முதல்வர் ஓபிஎஸ், அவர்கள் அருகில் சென்று பேசினார். இருவரையும் மேடையில் வந்து அமருமாறு கேட்டார். முதலில் கமலும் ரஜினியும் தயங்கினர். பின்னர் இருவரும் மேடைக்குச் சென்றனர்.

சமீபகாலமாக நடிகர் கமலும் அமைச்சர்களும் மோதிக் கொண்ட நிலையில், அவர்கள் ஒவ்வொருவரும் நேருக்கு நேர் சந்த்தித்து பேச்சிக் கொண்டதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

முன் வரிசையில் அமைச்சர்களுடன் நடிகர் ரஜினி, கமல், நாசர் அமர்ந்திருந்தனர். நடிகர் சங்க நிர்வாகிகளான செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்கியதும், அமைச்சர்கள் ரஜினி, கமலுக்கு மாளை அணிவித்து வர வேற்றனர். பின்னர் நடிகை ராதிகா, சரத்குமார், சத்யராஜ், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

நடிகர் பிரபு : சிவாஜி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டு விழா அண்டு. அம்மா விரும்பிய மணி மண்டபம் இன்று திறக்கப்பட்டுள்ளது. அப்பா அரசியலுக்கு அப்பாற்பட்டவர். மணி மண்டபத்தில் அனைத்து தலைவர்களுடன் இருக்கும் படத்தை வைக்க வேண்டும். அப்பாவின் சிலையை திறந்த கருணாநிதியின் கல்வெட்டை ஓரமாக வைக்க வேண்டும்.

கமல்ஹாசன் : நடிக்க வரவில்லை என்றாலும் ஒரு ரசிகனாக வந்திருப்பேன். எத்தனை அரசுகள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தாக வேண்டும். யாரையும் கெஞ்சியோ கொஞ்சியோ கேட்க வேண்டியதில்லை.

ரஜினிகாந்த் : ஓபிஎஸ் அதிஷ்டசாலி. நிறைய முறை நிருபணம் ஆகியிருக்கிறது. சிவாஜியின் மணிமண்டபத்தை திறக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது. ஒரு நடிகராக இருந்தால் மட்டும் மணிமண்டபம் கட்டியிருக்க மாட்டார்கள். சுதந்திர போராட்ட வீரர்களாக நடித்து அடி மட்ட மக்கள் வரையில் கொண்டு சேர்த்தவர். கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த போது தன்னுடைய நடிப்பை மட்டும் நம்பி உச்சத்தை தொட்டவர் சிவாஜி. அரசியலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்கி, தனது தொகுதியில் தோற்றார். அது அந்த தொகுதி மக்களுக்கு அவமானம். அரசியலுக்கு வருவது சினிமா புகழ் மட்டும் போதாது அதுக்கு மேலும் வேண்டும். அது எனக்குத் தெரியாது. கமலுக்கு தெரிந்திருக்கலாம். இப்போது கேட்டால் சொல்ல மாட்டார். 2 மாதம் முன் கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்.

அமைச்சர் கடம்பூ ராஜூ : நடிகர் திலகமும் மக்கள் திலகமும் போல இன்று ரஜினியும் கமலும் உள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமார் : அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் ஒற்றுமையாக கலந்து கொள்ளும் விழா இது என்பதால் இந்த நாள் இனிய நாள் என்று குறிப்பிட்டேன். பண்பாட்டின் அடையாளமாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ் பேசுவதற்கு என்னுடைய இன்ஸ்பரேஷன், நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்தான். (சிவாஜி பட பாடல், வசனங்களை உற்சாகமாக பேசிக் காட்டினார்)

துணை முதல்வர் ஓபிஎஸ் : பெரியாரால் பாராட்டப்பட்டு அண்ணாவால் வளர்க்கப்பட்டவர் சிவாஜி கணேசன். வீரபாண்டிய கட்டப்பொம்மன் எப்படியிருப்பார் என்பதை இன்றைய தலைமுறை கண்டதில்லை. அவர்கள் சிவாஜி வடிவில் பார்த்திருக்கிறார்கள். அரசியலில் இரு துருவங்களான சிவாஜியும், எம்.ஜி.ஆரும் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டியவர்கள். தாயை

நேசிப்பவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வருவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர்.

கூட்டத்தில் நடிகர் நாசர் திரையுலக வளர்ச்சிக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார். அவர் என்ன கோரிக்கை என்று சொல்லவில்லை. அதை அவர் கோரிக்கை வைத்தால் அரசு நிச்சயம் உதவி செய்யும்.

Rajinikanth Shivaji Manimandabam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment