Advertisment

சசிகலா பரோல் இன்றோடு முடிகிறது! சிறைக்கு திரும்புவது எப்போது?

சசிகலாவின் ஐந்து நாள் பரோல் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை காலை சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
சசிகலா சிறப்பு வசதி

சசிகலா சிறப்பு வசதி

சசிகலாவின் ஐந்து நாள் பரோல் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை காலை சென்னையில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சசிகலா திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனுக்கு (வயது 74), சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த மருத்துவமனையில் இருந்தே அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், நடராஜனை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் வந்துள்ள சசிகலா, சென்னை தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை தினமும் சந்தித்து, அவருடைய உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.

இந்தநிலையில், நேற்று 4-வது நாளாக நடராஜனை பார்ப்பதற்காக தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் இருந்து பகல் 11.30 மணிக்கு புறப்பட்டார் சசிகலா. அவருடன் இளவரசியின் மகன் விவேக், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் உடன் வந்தனர். பகல் 12.45 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்த சசிகலாவின் கார் மீது கட்சி தொண்டர்கள் மலர்களை தூவி வரவேற்றதுடன், வாழ்த்து கோஷங்களும் எழுப்பினர். அப்போது, இரண்டு குழந்தைகளுக்கு  சசிகலா பெயர் வைத்தார். ஆண் குழந்தைக்கு 'ஜெயக்குமார்' என்றும், பெண் குழந்தைக்கு 'ஜெயலலிதா' என்றும் பெயர் சூட்டினார்.

தொடர்ந்து சசிகலாவின் கார் முன்பு, தொண்டர்கள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றி போட்டு உடைத்தனர். பின்னர் மருத்துவமனையில் முதல் தளத்தில் ஒதுக்கப்பட்ட 2005 என்ற எண் கொண்ட அறைக்கு சசிகலா சென்றார். அறையில் இருந்தபடியே டாக்டர்களை அழைத்து ம.நடராஜனின் உடல் நிலை குறித்து சசிகலா கேட்டறிந்தார்.

இதுகுறித்து சசிகலாவிடம் விளக்கமளித்த மருத்துவர்கள், "நடராஜன் படிப்படியாக குணமடைந்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு ‘டிரக்கியாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டுள்ளதால் பேச முடியாது. ஆனால் மருத்துவர்கள் கூறுவதை அவரால் புரிந்து கொண்டு அதன்படி செயல்பட முடிகிறது. தொடர்ந்து அவர் எங்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். எதிர்பார்த்த அளவு அவருடைய உடல்நிலை படிப்படியாக தேறி வருகிறது" என்றனர்.

சசிகலாவின் ஐந்து நாள் பரோல் இன்றுடன் (அக்.11) முடிவடைகிறது. நாளை (அக்.12) மாலை 5 மணிக்குள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சசிகலா திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை காலை அல்லது பிற்பகலில் அவர் சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை காலை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு சசிகலா கிளம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றுடன் பரோல் முடிவடைய இருப்பதால் கடைசியாக 5-வது நாளான இன்று (புதன்கிழமை) கணவர் நடராஜனை பார்க்க சசிகலா வருவார் என்று கூறப்படுகிறது.

M Natarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment