Advertisment

ரஜினி மக்கள் மன்றத்தின் லோகோவில் மீண்டும் மாற்றம்

லோகோவின் வெளிப்புறம் இருந்த பாம்பு முத்திரையும் நீக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமன லெட்டர் பேடில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரஜினி மக்கள் மன்றத்தின் லோகோவில் மீண்டும் மாற்றம்

ரஜினி மக்கள் மன்றத்தின் லோகோவில், இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பார் என நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் பயண அறிவிப்பை வெளியிட்டார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை பதிவுபெற்ற ரசிகர் மன்றங்கள் மட்டுமின்றி, பதிவுபெறாத மன்றங்கள், ரசிகர்களை இணைக்கும் வகையில் இணையதளம் மற்றும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்ற மேடையில் இருந்த தாமரையுடன் கூடிய பாபா முத்திரை, இந்த இணையதளத்தில் இடம்பெற்றதால், அவர் பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று செய்தி பரவியது. எனவே, தாமரையை நீக்கிவிட்டு பாபா முத்திரை மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளது. அத்துடன், ‘உண்மை, உழைப்பு, உயர்வு’ என்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

இன்னும் கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிவிக்கப்படாத நிலையில், உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், இதுவரை ரஜினி ரசிகர் மன்றம் என அழைக்கப்பட்டு வந்த ரஜினியின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், லோகோவின் வெளிப்புறம் இருந்த பாம்பு முத்திரையும் நீக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமன லெட்டர் பேடில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக லோகோவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

rajini makkal mandram

Rajini Makkal Mandram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment