Advertisment

"வெற்றிலை பாக்கை மாற்றி உறுதி செய்துவிட்டோம்; தேதி பின்னர் அறிவிக்கப்படும்": ராஜ்யசபா சீட் கேள்விக்கு பிரேமலதா பதில்

ராஜ்யசபா சீட் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், "வெற்றிலை பாக்கை மாற்றி உறுதி செய்துவிட்டோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும். நேர்காணல் நடத்தி முறைப்படி வேட்பாளர்களை தேர்வு செய்வோம்" என்று தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Premalatha Vijayakanth on DMDK ADMK Alliance and Rajya Sabha member Tamil News

தே.மு.தி.க அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக வந்து மரியாதை செலுத்தினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Premalatha Vijayakanth | Dmdk | Aiadmk | Edappadi K Palaniswami | Lok Sabha Election: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை முடித்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இன்னும் சில கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பரபரப்பான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

Advertisment

இந்த நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க 33 தொகுதிகளிலும், தே.மு.தி.க 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

இதில், தே.மு.தி.க.வுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தே.மு.தி.க அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக வந்து மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து தே.மு.தி.க அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு சென்றுள்ளார். மாவட்டச்செயலாளர்களின் விருப்பபடியே அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க கூட்டணி வைத்துள்ளது. வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

திருச்சியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் 40 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவர். 2011-ம் ஆண்டு அமைத்த வெற்றிக்கூட்டணியை மீண்டும் அமைத்துள்ளோம். வெற்றிலை பாக்கை மாற்றி உறுதி செய்துவிட்டோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும்

மாநிலங்களவை வேட்பாளர் யார் என்பதை நேர்காணல் நடத்தி முறைப்படி தேர்வு செய்து அறிவிப்போம். தே.மு.தி.க விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க வழங்கி உள்ளது. 2011 சட்டமன்ற தேர்தலைப்போல வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவோம். தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறேன்.

தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும். மார்ச் 24 ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தே.மு.தி.க தொடங்குகிறது. மார்ச் 25-ம் தேதி தேமுதிக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்கள்." என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk Edappadi K Palaniswami Dmdk Premalatha Vijayakanth Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment