Advertisment

இரட்டை இலைக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் சென்னையில் ஒருவர் கைது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சென்னையில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SUKESHCHANDRASEKHARa

இரட்டை இலை வழக்கில் கைதான சுகாஷ் சந்திரசேகர்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சென்னையில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வீடு திரும்பாமலேயே இறந்துபோனார். இதையடுத்து, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா குடும்பத்தினர் இறங்கினர்.

சசிகலாவை கட்சியின் பொது செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்ய வைத்தனர். தற்காலிக முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற கட்சி தலைவராகவும் தேர்வானார், சசிகலா. ஆனால், அவரை முதல் அமைச்சராக பதவி ஏற்க அழைக்காமல் கவர்னர் தாமத்தப்படுத்தினார்.

அடுத்த சில நாட்களில் ஓ.பன்னீர் செல்வம் போர் கொடி தூக்கினார். இதையடுத்து கட்சி இரண்டாக பிளவுப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்து பாதுகாத்தார், சசிகலா. அடுத்த சில நாட்களிலேயே சொத்துக்குவிப்பு மேல் முறையிடு வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சசிகலாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சசிகலா சிறை சென்றதும், டிடிவி.தினகரன் தலைமை தாங்கினார். அந்த நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கியது. தொப்பி சின்னத்தில் டிடிவி.தினகரன் போட்டியிட்டார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக தேர்தல் நிறுத்தப்பட்டது.

அடுத்த சில நாட்களில் டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகாஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை டிடிவி.தினகரன் அணிக்கு கொடுப்பதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வைத்திருந்ததாகவும், அந்த பணத்தை டிடிவி.தினகரன் கொடுத்ததாகவும் கூறினார்.

இதையடுத்து, டெல்லி போலீசார் டிடிவி.தினகரனை டெல்லிக்கு விசாரணைக்கு அழைத்தனர். விசாரணை முடிந்ததும், அவரை சிறையில் அடைத்தனர். திகார் சிறையில் இருந்த டிடிவி.தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார். நவம்பர் 21ம்தேதி இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு கொடுத்தது, தேர்தல் கமிஷன்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஹவாலா புரோக்கர் ஜெய் விக்ரம் என்பவரை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். அவரை சென்னையில் இருந்து விசாரணைக்காக டெல்லி அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில், திடீரென சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரபாகியிருக்கிறது.

V K Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment