Advertisment

தீபாவளி கொள்ளையில் ஆம்னி பஸ்கள் : புகார் தெரிவிப்பது எப்படி?

நேரடியாக அதிக கட்டணத்தை பதிவு செய்திருக்கும்போது, அவற்றின்மீது தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
டாஸ்மாக், நகைக் கடைகள் மூடல்: விமான போக்குவரத்து முழுமையாக ரத்து

விழாக்காலங்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை, ஆம்னி பேருந்துகளில் அதிகமாக வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணம். ஆம்னி பேருந்துகளுக்கென முறையான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்காததால் இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

Advertisment

சென்னை கோயம்பேடு, எழும்பூர், தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை ஆகிய பல்வேறு மாவட்டங்களுக்கு நாள்தோறும், 700 முதல் 900 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பண்டிகை காலங்களில் கூடுதலாக 500 முதல் 600 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருநாள் தான் உள்ளது. சென்னையிலுள்ள பெரும்பாலான மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல துவங்கிவிட்டனர். இந்தாண்டு தீபாவளிக்கு 4,820 சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு சார்பில் இயக்கப்படுகின்றன. ரயில்களில் இருக்கை கிடைக்காத பலரும், ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வர்.

இம்முறையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுப்பப்படுகின்றன. வழக்கமான கட்டணத்தைவிட 50 முதல் 60 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

சென்னை-மதுரைக்கு ரூ.900 முதல் ரூ.1,500 வரையிலும், சென்னை - கோயம்புத்தூர் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையிலும், சென்னை - திருநெல்வேலி ரூ.1,000 முதல் ரூ.1,900 வரையிலும், சென்னை-தஞ்சை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குமுறுகின்றனர். வழக்கமான நாட்களில் இவற்றில் பாதி தொகையே பெரும்பாலும் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது புகார் அளிக்க 1800 4256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. எனினும், ஆம்னி பேருந்துகள் தங்களது இணையத்தளங்களில் நேரடியாக அதிக கட்டணத்தை பதிவு செய்திருக்கும்போது, அவற்றின்மீது தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆம்னி பேருந்துகளில் இவ்வளவு தூரத்துக்கு இந்த தொகை என தமிழக அரசு நிர்ணயிக்காததாலேயே இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் பதிவு செய்யும்போது இடைத்தரகர்கள் உள்ளே புகுந்து 10 முதல் 20 சதவீதம் டிக்கெட் விலையை அதிகரித்து கூறுவதாலும் பயணிகள் அதிக கட்டணத்தால் அவதியுறுகின்றனர்.

பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களிலும் இத்தகைய பிரச்சனை தொடர்ந்துவருவதால், தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment