Advertisment

ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கு : சட்டமன்ற செயலாளருக்கு மேலும் 2 நாட்கள் அவகாசம்

ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் எழுத்து பூர்வ இறுதி வாதங்களை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India Union Budget 2019 Live Updates

India Union Budget 2019 Live Updates

ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் எழுத்து பூர்வ இறுதி வாதங்களை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் 11 பேருக்கு எதிராக கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடவும், அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி திமுக கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நான்கு பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு கடந்த 27 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்த போது, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கொறடா உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என இந்த நீதிமன்றத்தில் கூறி விட்டு, தேர்தல் ஆணையத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஒ.பி.எஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியது நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளிப்பதற்கு சமம் ஆகும்.

பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தகுதி நீக்கப்பட்டால், அவர்கள் அமைச்சர்களாக ஒரு நொடி நீடிப்பது சட்ட விரோதமானது ஆகும். தினகரன் ஆதரவு எம்.எல் ஏ க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக புகார் அளித்த நாளிலேயே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் இந்த விசயத்தை எப்படி நியாயப்படுத்துகிறார் எனத் தெரியவில்லை .

சபாநாயகர் சட்டப்பேரவை தலைவராக செயல்படாமல், கட்சி சார்ந்துதான் செயல்பட்டிருக்கிறார் என்பதையே அவரது நடவடிக்கை காட்டுகிறது. சபாநாயகர் தன் அரசியல் சாசன கடமையை செய்யத் தவறினால், நீதிமன்றம் தன் அரசியல் சாசன கடமையை செய்ய வேண்டும் எனவே அரசுக்கு எதிராக வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கபில் சிபல் பதில் வாதிட்டார்.

பின்னர் வெற்றிவேல் உள்ளிட்ட 4 பேர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார். அவர் தன்னுடைய வாதத்தில், கட்சி சார்பில் அறிவிக்கப்படும் முடிவுகள் அனைத்து எம் எல் ஏ க்களுக்கும் பொருந்தும்.கொறடா உத்தரவு என்பது அனைத்து எம் எல் ஏ க்களுக்கும் பொருந்தும். ஆனால் தனக்கு கொறாட உத்தரவு இல்லை என்பதை ஏற்க முடியாது.கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் பன்னிர் செல்வம் அணியினர் தெரிவித்ததை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தகுதி நீக்கம் கோரிய புகார் குறித்து முடிவெடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. எனவே நீதிமன்றம் உத்தரவிடலாம் என வாதிட்டார். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. பின்னர் நீதிபதிகள் எழுத்துபூர்வ வாதங்களை மார்ச் 5 ஆம் தேதி தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவை செயலாளர் தவிர மற்ற தரப்பினர் அனைவரும் எழுத்து பூர்வமான இறுதி வாதங்களை தாக்கல் செய்தனர். சட்டப்பேரவை செயலாளர் சார்பில் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வரும் 7 ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளித்த நீதிபதிகள், விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Chennai High Court O Panneerselvam Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment