Advertisment

மின் கட்டணம் செலுத்த புதிய ஆப்: என்னென்ன வசதிகள் உள்ளது? ஒரு பார்வை

மேலும் ஒரு வசதியாக, கட்டணங்களை செலுத்த TANGEDCO மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
மின் கட்டணம் செலுத்த புதிய ஆப்: என்னென்ன வசதிகள் உள்ளது? ஒரு பார்வை

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தும் அறிவிப்புகளை வெளியிட்டும் வருகின்றனர்.

Advertisment

அதன் ஒரு பகுதியாக, பேரவைக்கூட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ ஒருவர், தன் தொகுதியில் உள்ள மின்கட்டண சேவை மையம் மாற்றப்பட்டதால், மீண்டும் தன் தொகுதியில் கட்டண சேவை மையம் தொடங்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ''மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்த மொபைல் ஆப் நடைமுறைக்கு வந்தவுடன், மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை மிகவும் எளிதாகிவிடும்'' என்றார்.

அதைத் தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப் சேவையை அமைச்சர் தங்கமணி நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் 2.7 கோடி நுகர்வோர்கள் தாழ்வழுத்த மின் இணைப்பை 'டான்ஜெட்கோ' மூலம் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் பல வழிகளில் மின்சார கட்டணங்களை செலுத்த டான்ஜெட்கோ உதவுகிறது. நுகர்வோர்கள் நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, தபால் நிலைய கவுண்ட்டர்கள், வங்கிகள், வங்கி ஏடிஎம்கள், வங்கிகளின் மொபைல் ஆப்கள் மற்றும் இ-சேவா ஆகிய வழிகளின் மூலம் மின்சார கட்டணங்களை செலுத்தலாம்.

தற்போது, மேலும் ஒரு வசதியாக, கட்டணங்களை செலுத்த TANGEDCO மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

பின், TANGEDCO நுகர்வோர் எண், பாஸ்வோர்ட், இ-மெயில் ஐடி மற்றும் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து அந்த ஆப்-ல் ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.

என் பில்(My Bills), விரைவாக பணம் செலுத்தலாம்(Quick Pay), என் நுகர்வோர்கள்(My Consumers), பில் கால்குலேட்டர்(Bill Calculator), பரிவர்த்தனை சரி பார்த்தல்(Check Transactions) ஆகிய வசதிகள் இந்த மொபைல் ஆப்-ல் கொடுக்கப்பட்டுள்ளன.

பணம் செலுத்தும் வழிமுறைகள்:

1. Net Banking: ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஃபெடரல் வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி, IDBI வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில கோ-ஆப்ரேட்டிவ் வங்கி.

2. கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு: HDFC வழியாக

3. டெபிட் கார்டு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

மேலும், முழு விவரங்களை அறிய http://www.tangedco.gov.in எனும் தளத்தை பார்க்கலாம்.

Minister Thangamani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment