Advertisment

நீட் விவகாரத்தில் அமைச்சர்கள் வாய் திறக்க கூடாது: உயர் நீதிமன்றம் கண்டிப்பு

நீட் தேர்வு தொடர்பாக ஊடகங்களிடம் பேச கூடாது என தமிழக அமைச்சர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
theni constituency,O.P.Raveendranath Kumar, ADMK, Milani, Madras High Court, தேனி மக்களவைத் தொகுதி, ஓ.பி.ரவிந்திரநாத் குமார், அதிமுக, சென்னை உயர் நீதிமன்றம், DMK, Congress,

theni constituency,O.P.Raveendranath Kumar, ADMK, Milani, Madras High Court, தேனி மக்களவைத் தொகுதி, ஓ.பி.ரவிந்திரநாத் குமார், அதிமுக, சென்னை உயர் நீதிமன்றம், DMK, Congress,

நீட் தேர்வு தொடர்பாக ஊடகங்களிடம் பேச கூடாது என அமைச்சர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Advertisment

நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு.

எனினும் நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு வாங்கி விடுவோம் என கூறி வந்த தமிழக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியது. ஆனால், நீட் அடிப்படையில் தான் கலந்தாய்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், நீட் தேர்வில் தேர்வாகாத மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விரக்தியடைந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த 1-ம் தேதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் விரைவில் அமைக்கப்படும். மேலும், நீட் தேர்வுக்கான வல்லுநர் குழுவும் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசு இதுவரை நீட் தேர்வு தொடர்பான வல்லுநர் குழுவை அமைக்கவில்லை.

இந்நிலையில், நீட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு தொடர்பான வல்லுநர் குழுவை அமைக்காத தமிழக அரசுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு அரசால் விலக்கு பெற முடியவில்லை. ஆனால், நீட் விவகாரத்தில் விலக்கு பெற்று விடுவோம் என மாணவர்களை நம்ப வைத்து தமிழக அரசு ஏமாற்றி விட்டது எனவும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

வல்லுநர் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வல்லுநர்களை கண்டறிந்து குழு அமைக்க ஒரு மணி நேரம் போதாதா என்றும் அவர் வினவினார். அரசு காலம் தாழ்த்தியதால்தான் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று கூறிய நீதிபதி, நீட் தேர்வு தொடர்பாக ஊடகங்களிடம் பேச கூடாது என்று அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு பயிற்சி மையம், வல்லுநர் குழு அமைப்பது தொடர்பாக அக்டோபர் 6-ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

Chennai Neet High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment